முகப்பரு என்பது அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை. சிலர் இதற்கு கிரீம்கள், மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்கள், மற்றவர்கள் லேசர் சிகிச்சை செய்கிறார்கள். ஆனால் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபட கருத்தடை மாத்திரை சாப்பிடுவது பற்றி தெரியுமா? அது எவ்வளவு பாதுகாப்பானது, நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
முகப்பருவை குணப்படுத்த கருத்தடை மாத்திரைகள் எடுப்பது போன்ற பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இணையத்தில் கிடைக்கும் பல வீடியோக்களில், அதை எடுத்துக்கொள்வதால் சில ஏற்படுவதாக ஆதாரங்களுடன் கூறப்படுகின்றன. அதேசமயத்தில் இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வீடியோக்களும் செய்திகளும் சமூகவலைதளத்தில் உலா வருகின்றன. சிலர் கருத்தடை மாத்திரைகள் மூலம் பருக்கள் விரைவில் குணமாகும் என்று கூறுகிறார்கள், மற்றவர்கள் அதை உட்கொண்ட பிறகு அவர்களின் பருக்கள் மோசமாகிவிடும் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் மருத்துவர்கள் கூறும் கருத்து என்ன என்பது குறித்து அறிய முற்பட்டோம். அப்போது முகப்பரு சிகிச்சைக்காக கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவதை மருத்துவ உலகம விரும்புவது இல்லை என்பது தெரியவந்தது. குறிப்பாக நோயாளிக்கு PCOS அல்லது PCOD இருக்கும் சந்தர்ப்பங்களில். இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.
முகப்பருக்கான மருத்துவத்தை மருத்துவர் தான் முடிவு செய்ய வேண்டும்
undefined
முகப்பருவின் உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறியவும், அதற்கான பரிசோதனை நடவடிக்கைகளை குறித்து மருத்துவர் தான் உரிய முடிவு எடுக்க தகுதியானவர். உங்களுடைய பாதிப்பை கண்டறிய உட்சுரப்பியல் நிபுணர் அல்லது மகப்பேறு மருத்துவரை நாட வேண்டும். அப்போது தான் இதனுடைய பாதிப்பின் காரணத்தை அறிந்து, அதற்கான வகையில் சிகிச்சை அளிக்க முடியும்.
நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்வதில் இருக்கும் ஆபத்து- தடுப்பதற்கான 4 வழிமுறைகள்..!!
கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு குறித்து தெரிந்துகொள்ளுங்கள்
முகப்பரு சிகிச்சைக்கு எந்த மருத்துவரும் கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைப்பது கிடையாது. ஆனால் முகப்பருக்கான காரணம் PCOS அல்லது PCOD என கண்டறியப்பட்டால், சில சமயங்களில் நோயாளிக்கு கருத்தடை மாத்திரை கொடுக்கப்படுகிறது. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் கூடுதல் ஹார்மோன் சமநிலை மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
முகப்பருவுக்கு கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது சரியா?
முகப்பருவை குணப்படுத்த கருத்தடை மாத்திரைகளை மருந்துவர் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் சிகிச்சையின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவது மிகவும் முக்கியது. PCOS அல்லது பிற ஹார்மோன் பிரச்சனைகளை குணப்படுத்துவது கடினம். மேலும் இதை சரியாக செய்யவில்லை என்றால் முகப்பரு மட்டுமின்றி வேறு வகையான பிரச்சனைகளும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம்.