குழந்தைகளை பாதிக்கும் கோடைகால நோய்கள்-  எப்படி தடுக்கனும் தெரியுமா?

குழந்தைகளை பாதிக்கும் வெயில் கால நோய்கள் குறித்தும் அவற்றை தடுக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

summer diseases in kids tips to prevent summer diseases in tamil mks

Children's Health: Things To Consider During The Hot Season : இந்தியாவில் கோடைக்கால வெயில் என்பது கொடூரமானதாக இருக்கும் சுட்டெரிக்கும் வெயிலில் பெரியவர்களே வெளியில் செல்லும்போது சிரமப்படுவார்கள். ஆனால் கோடைக்காலம் பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் உற்சாகமாக விளையாடி திரிவார்கள்.  கோடைக்காலத்தில் வெப்பநிலையானது குழந்தைகளை தாக்காத வண்ணம் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் வெளியில் விளையாட சென்றால் கூடுதம் கவனம் கொள்ள வேண்டும். 

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படுவதோடு நின்றுவிடுவதில்லை. சில நோய்கள் வரும் அபாயமும் உண்டு. குழந்தைகளை பாதிக்கும் வெயில் கால நோய்கள் குறித்தும் அவற்றை தடுக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos

வியர்வை தொற்று: 

குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதனாலேயே அவர்களுக்கு அதிக வியர்வை வெளியேறும். அக்குள், முழங்கை மடக்குமிடம், தொடை இடுக்கு, அந்தரங்க பகுதிகளில் வியர்வையும் வெப்பமும் அதிகமாக இருக்கும். இதனால் அரிப்பு, வியர்க்குரு, பூஞ்சை தொற்று ஏற்படலாம். சொறி, சரும அரிப்பு, தோலில் சிவப்பு தடிப்பு ஆகியவை ஏற்படும். படர்தாமரை கூட வரலாம். 

தடுக்கும் முறை? 

பருத்தி ஆடைகளை அணிய வையுங்கள். இரண்டு நேரம் குளிக்க வேண்டும். உடலை நன்கு துடைத்துவிட்டு ஆடைகளை மாற்ற வேண்டும். வியர்வையோடு அப்படியே இருக்கக் கூடாது. நன்றாக தண்ணீர் குடிக்க சொல்ல வேண்டும். 

இதையும் படிங்க:  பெற்றோரே!! குழந்தைகளுக்கு கட்டாயம் கற்று கொடுக்க வேண்டிய '5' காலைப் பழக்கங்கள் தெரியுமா? 

வெப்ப பக்கவாதம்: 

குழந்தைகள் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் வெயில் அதிகமாக உலாவும்போது அவர்களுக்கு ஹீட் சன்ஸ்ட்ரோக் என்ற வெப்ப பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் மூளை செல்கள் சேதமடையலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு, நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு, இந்த பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம். அதே வேலையில் குழந்தைகளும் இந்த பாதிப்பை சந்திப்பு கூடும் என சொல்லப்படுகிறது. கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, வலிப்பு, தீவிர இதயத்துடிப்பு ஆகியவை ஏற்பட்டால் அலட்சியம் செய்யவேண்டாம். 

எப்படி தடுக்கலாம்? 

வெயில் காலத்தில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பவேகூடாது என சொல்லவில்லை. காலை, மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுப்பலாம். ஆனால் காலை 11 மணிக்கு பிறகு அனுப்ப வேண்டாம். மாலை 4 மணிக்கு பின்பு குழந்தைகளை விளையாட அனுமதிக்கலாம்.  விளையாட செல்லும் போது அவர்களை தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அறிவுறுத்தங்கள்  வீட்டிலும் சரியான அளவில் தண்ணீர் குடிக்க வலியுறுத்துங்கள். வியர்வையை உறிஞ்சும் தளர்வான ஆடைகளை அணிய சொல்லுங்கள். 

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு வெள்ளை முடி வர 'இப்படி' ஒரு காரணமா? உடனே கவனிங்க!!!

நீரிழப்பு: 

உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் நீரிழப்பு ஏற்படுவது பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் வரலாம். கோடை காலங்களில் குழந்தைகளுக்கு அதிகமான அளவில் வியர்வை வெளியேறக்கூடும். வியர்வை, சிறுநீர் வழியாக உடலில் உள்ள திரவங்கள் வெளிவருவதால் அவர்களுக்கு நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. குழந்தைகள் பெரியவர்களைப் போல அடிக்கடி தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் அவர்களுக்கு நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 

தடுக்கும் முறை? 

உங்களுடைய குழந்தை சரியாக தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது அவசியம்.  அவர்கள் சிறுநீர் கழிக்கும்போது என்ன நிறத்தில் இருக்கிறது என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தார்கள் என்றால் நீழிப்பு பிரச்சனையை சந்திக்கிறார்கள் என புரிந்துகொண்டு தண்ணீர் குடிக்கச் சொல்லுங்கள்.  தண்ணீர் குடிக்க மறுத்தால் எலுமிச்சை பழச்சாறு, நீச்ச தண்ணீர், இளநீர், மோர், பானகம், தர்பூசணி, முலாம் போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகள் கொடுக்கலாம்.  

வேனிற்கட்டிகள்: 

வெப்பத்தினால் முகம், கை, கால், பிட்டம் என கொப்புளங்கள் வரம். இதனை வெப்ப கொப்புளங்கள் அல்லது வேனிற்கட்டிகள் என சொல்வார்கள். பல குழந்தைகள் வெயில்காலத்தில் குழந்தைகளை அதிகம் தாக்கும் பிரச்சனை இதுவாகும். 

தடுக்கும் முறை? 

காலை, மாலை கண்டிப்பாக குளிக்கவேண்டும். இது குழந்தைகள் மீதுள்ள அழுக்கு, வியர்வை அதனால் வரும் அரிப்பை நீக்க உதவும். உள்ளாடைகள் ஈரமாக இருந்தால் உடனே மாற்றவேண்டும். சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். தோல் ஈரப்பதமாக, குளிர்ச்சியாக இருக்கும்வகையில் அவ்வப்போது இளநீர், நுங்கு, சந்தனம் ஆகியவற்றை சருமத்தில் பூசுங்கள். காலை வேளையில் 
குழந்தைகளை எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கலாம். 

பொதுவாக மழைக்காலங்களில் தான் நீரில் பரவும் நோய்கள் அதிகமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் கோடை காலங்களிலும் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் தாக்கம் இருக்கும். பெரும்பாலும் குழந்தைகள் வெளியில் சாப்பிடும் போது அதிலும் சுகாதாரமற்ற நிலையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடும் போது இந்த பாதிப்புகள் உருவாக வாய்ப்புண்டு.

புட் பாய்சன்: 

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு புட் பாய்சன் ஆகும் வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை சுத்தமாக சமைக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்கு வெளியிடங்களில் உணவு, ஐஸ்கீரிம் வாங்கி கொடுப்பதை தவிருங்கள். உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும் உணவுகளை தவிர்க்கலாம். காரம் அதிகமுள்ள மசாலா, எண்ணெய் உணவுகள் கொடுக்க வேண்டாம். காய்கறிகள், பழங்களை கொடுக்கும் முன் ஓடும் நீரில் கழுவி உண்ணக் கொடுங்கள். கழிப்பறை சென்ற பின்னர்  கைகளை சுத்தம் செய்வதை வழக்கப்படுத்துங்கள்.  

சின்னம்மை: 

வெயிலில் குழந்தைகளுக்கு வரும் நோய்களில் சின்னம்மையும் முக்கியமானது. உடல் எங்கும் தண்ணீர் கொப்புளங்களாக குழந்தைகளை பாடாய்படுத்திவிடும்.  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் இந்த நோய் காற்றின் மூலம் பரவும். இந்த நோய் பாதித்த நபர் இருமினால் அல்லது தும்மினால் மற்றொருவருக்கு பரவிவிடும். 

தடுக்கும் முறை: 

  • குழந்தைகளுக்கு தவறாமல் பருவ கால தடுப்பூசி போட வேண்டும்.
  • சின்னம்மை பாதித்த நபரை  தனிமைப்படுத்தி கவனித்து கொள்ளுங்கள்.  
  • பாதிக்கப்பட்ட நபர் குழந்தைகளிடம் பழகினால் அவர்களுக்கும் வரக் கூடும்.
vuukle one pixel image
click me!