உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்ப புரோட்டீன் குறைபாடு தான் காரணம்..! செக் பண்ணுங்க..

By Kalai SelviFirst Published Jan 29, 2024, 4:15 PM IST
Highlights

நம் உடலில் புரதம் குறைவாக இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்..
 

நாம் ஆரோக்கியமாக இருக்க நம் உடலுக்கு பொதுமான அனைத்து வகையான சத்துக்களும் தேவை. ஒருவேளை இவை பொதுமான அளவு இல்லாவிட்டால் உடல்நலக் குறைவால் அவதிப்பட வேண்டியிருக்கும். எனவே, ஆரோக்கியமாக இருக்க பொதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கண்டிப்பாக அவசியம். வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை இல்லாதது உடலில் நோய்கள் தாக்க வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் ஆபத்து தான். எனவே, அவை அனைத்தும் தேவையான அளவு இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இந்த வரிசையில்தான் பலர் புரதச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். சில ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் புரோட்டீன் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இது அடிக்கடி தொற்று மற்றும் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. சிலருக்கு முடி உதிர்தலுடன் சரும பிரச்சனைகளும் ஏற்படும். சில சமயங்களில், உடலில் புரதச்சத்து குறைபாடு குறைவாக இருந்தாலும், அறிகுறிகள் தென்படுவதில்லை. அப்போ வேறு என்ன..? புரதம் குறைவாக இருந்தால் என்ன மாதிரியான பிரதிபலிப்புகள் வரும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

இந்த அறிகுறிகள் ப்ரோட்டின் குறைபாட்டுக்கு காரணம் : 

தசை பலவீனம்: இன்றைய காலகட்டத்தில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. தசைகள் வலுவிழந்தால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகும். புரதம் இல்லாததால் தசை வலிமை குறைகிறது. இதனால் உடல் வடிவம் குறையும் வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு தசை பிரச்சனைகள் மற்றும் வலிகள் இருந்தால் ஒருமுறை புரோட்டீன் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அதிகப்படியான முடி உதிர்தல்: உடலில் புரதம் குறைவாக இருந்தால், முடி அதிகமாக உதிர்கிறது. சிலருக்கு வெள்ளை முடியும் வரும். முடி உயிரை இழந்து உயிரற்றதாகிவிடும். எனவே இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

இதையும் படிங்க:  புரோட்டீன் குறைபாட்டால் பாலியல் நடவடிக்கையை பாதிக்கப்படுமா...??

நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது: உடலில் புரதச் சத்து குறைவாக இருந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இது நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியைக் குறைக்கிறது. திடீரென்று, உடல்நலப் பிரச்சினைகள் தாக்குகின்றன. மந்தமாக இருப்பது, எந்த வேலை செய்தாலும் உடனே சோர்வாக இருப்பது, வயிறு உப்புசம், உடல் ஆற்றல் இழப்பு போன்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன.

இதையும் படிங்க:  Healthy Food: இந்த 2 ஊட்டச்சத்துகளும் உணவில் கட்டாயம் இடம்பெறுவது அவசியம்...யார் சொல்றாங்க தெரியுமா..?

எடை இழப்பு: இந்த குறைபாட்டினால் சிலருக்கு உடல் எடை குறையும். எனவே அடிக்கடி உடல் எடை குறையும் பட்சத்தில் புரதச் சோதனை செய்து கொள்வது நல்லது. சிலருக்கு உடலில் ஆங்காங்கே வீக்கங்களும் காணப்படும். நகங்கள் விரைவாக உடைந்து, மோசமாகத் தோன்றும். எனவே, இதுபோன்ற பிரச்சனைகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!