Ration kadai palm oil Purification: ரேஷன் கடை பாமாயிலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி நீக்குவது என்பது குறித்து இந்த பதிவு விளக்குகிறது.
ரேஷன் கடையில் பாமாயில் வாங்குவது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் விஷயம். பல வீடுகளில் தாளிப்பது உள்ளிட்ட சமையலின் அடிப்படை தேவைகளுக்கு பாமாயில் பயன்படுகிறது. ரேஷன் கடையில் நமக்கு விலை குறைவாக பாமாயில் கிடைக்கும். சிலர் உடல் நலக்குறைவு ஏற்படும் என்பதற்காக பாமாயில் பயன்படுத்தமாட்டார்கள். சிலர் கடைகளுக்கு விட்டு விடுவார்கள். இதற்குக் காரணமே பாமாயிலில் சமைக்க பயன்படுத்தும் போது நமது உடலில் பித்தம் அதிகரிக்கும் என்பதுதான்.
இது மட்டும் இல்லை பாமாயிலில் காணப்படும் கொழுப்பு நம் உடல் நலத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள், இதய பிரச்சனை இருப்பவர்கள், தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் பாமாயில் எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது. ஆனால் வேறு வழியில்லாமல் பாமாயில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பாமாயிலை சுத்திகரிக்கும் முறை:
அடுப்பை மிதமான தீயில் வைத்து அதன் மீது ஒரு இரும்பு வாணலியை வைத்து கொள்ளுங்கள். இதில் பாமாயில் ஊற்றிவிடுங்கள். எண்ணெய் சூடாகும். இன்னொரு புறம் கொட்டை நீக்கிய புளி, கல் உப்பு, ஒரு சின்ன துண்டு இஞ்சி ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். புளியை உருண்டையாக எடுத்து அதன் நடுவில் உப்பை நிரப்புங்கள். புளிக்குள் இருக்கும் கல் உப்பு வெளியில் வராதபடிக்கு நன்கு உருட்டிக் கொள்ளுங்கள். இந்த புலியை உள்ளங்கையில் வடை போல தட்டி எண்ணெய்யில் போடுங்கள். சிறிது நேரம் கழித்து சின்ன துண்டு இஞ்சியையும் எண்ணெயில் போட்டு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் சூடாக விடுங்கள்.
எண்ணெயில் புளி போடும்போதும், இஞ்சி போடும்போதும் பொறியும். அது அடங்கிய பின்னர் எண்ணெய்யை இறக்கி ஆறவையுங்கள். பின்னர் வடிகட்டி பாட்டிலில் ஊற்றுங்கள். இப்போது எண்ணெயின் நிறம் மாறியிருக்கும். பாமாயிலில் உள்ள பித்தம் எல்லாவற்றையும் புளியும் இஞ்சியும் உறிஞ்சி விடும். இதனால் ரேஷன் கடை பாமாயில் தற்போது பயன்படுத்துவதற்கு ஆரோக்கியமான முறையில் தயாராகி விட்டது.
குறிப்பு : பாமாயில் புகை வரும் அளவிற்கு காய்ச்சும் போது அதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது. அதனால் மிதமான தீயில் கவனமாக காய விடுங்கள்.
இதையும் படிங்க: வெயில் காலத்தில் குழந்தைகளின் தலைமுடியை பராமரிக்க தரமான 5 டிப்ஸ்!!