சக்கரை நோயாளிகள் ஒவ்வொரு நாளும் தினசரி சாப்பிட வேண்டிய கீரை இதுதான்..!!

By Asianet TamilFirst Published Feb 4, 2023, 3:12 PM IST
Highlights

முருங்கை கீரைகளில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே சக்கரை நோயாளிகள் முருங்கை கீரைகளை அடிக்கடி உணவுகளில் சேர்த்துக்கொள்வது நல்லது.
 

முருங்கை இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்பி6, வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற அத்தியாவச ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதன்காரணமாக முருங்கை இலைகள் பல நோய் தீர்க்கும் மருந்தாகவே திகழ்கின்றன. 

நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்டிருப்பதால், முருங்கை இலைகள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. அதனால் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவ்வப்போது முருங்கைக் கீரைகளை சாப்பிட வேண்டும். வெறும் தண்ணீரில் போட்டுக் குடிப்பதும் நல்ல பயனையே வழங்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த முருங்கை இலைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். வைட்டமின் சி நிறைந்துள்ள முருங்கை இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் நன்மை பயக்கும். எனவே தினமும் சாப்பாட்டுடன் முருங்கை இலைகளை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 
 செரிமான பிரச்சனைகளை தீர்க்கவும் முருங்கை இலை உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாயு போன்றவற்றால் அவதிப்படுபவர்களும் முருங்கை இலையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஏர் பிரையரில் அலுமினியத் தாளை வைத்து சமைப்பது பாதுகாப்பானதா?

அதேபோல், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், அதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முருங்கை இலையில் நிறைந்துள்ளது. எனவே, முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முருங்கை இலைகள் ஆண்டி ஆக்சிடண்டுகள் களஞ்சியமாகும். சரும ஆரோக்கியம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

click me!