உடல் எடையை குறைத்து நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன். இவர் செய்த பயிற்சிகள் பற்றிய இங்கு பார்க்கலாம்..
தமிழில் ஒருசில படங்களே நடித்து பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், சில மாதங்களுக்கு முன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இவர் படம் நடிக்கவில்லை. இந்நிலையில் மஞ்சிமா மோகன் திடீர் உடல் எடை அதிகம் கொண்டு காணப்பட்டதால், இவர் பாடி ஷேமிங்கிற்கும் ஆளானர். ஆனால் அதனை பற்றி இவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட மஞ்சிமா உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் அவர் உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் ஒன்றையும் அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. எனவே, இத்தொகுப்பில் நாம் நடிகை மஞ்சிமா செய்த பயிற்சி பற்றிய விவரங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
undefined
இதையும் படிங்க: பழனி படிக்கட்டு மாதிரில இருக்கு... சிக்ஸ் பேக் உடன் மிரள வைக்கும் சூர்யா - வைரலாகும் போட்டோ
மஞ்சிமா மோகன் செய்த வலிமை பயிற்சிகள்..
நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இந்த பயிற்சிகள் அனைத்தும் உங்களது ஒட்டுமொத்த உடல் வலிமையையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் பலவிதமான வலிமை பயிற்சிகள் உள்ளதால்,
உங்கள் உடல்நலம் மற்றும் இலக்குகளை கருத்தில் கொண்டு நீங்கள் பயிற்சி செய்வது நல்லது. அந்த வகையில் நடிகை மஞ்சிமா மோகன் செய்த வலிமை பயிற்சிகளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடல் வலுவாக்கும்..
மஞ்சிமா செய்த இந்த பயிற்சிகள் உடலை வலுவாக வைக்க உதவுகின்றது. எனவே, இதைத்தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் உங்கள் உடல் சோர்வடையாமல் ஆற்றலுடன் வலுவாக இருக்கும்.
எடையை குறையும்..
மஞ்சிமா செய்த இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை எரித்து, உடலை குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்கா போனதும் ஆண் நண்பருடன் சமந்தா செஞ்ச வேலையை பாருங்க... அங்க போயும் இப்படியா?
மன அமைதிக்கு..
உங்களது மனநிலை ஆரோக்கியமாக இருக்க நீங்கள் இதுபோன்ற வலிமை பயிற்சிகளை செய்வது நல்லது. ஏனெனில் இந்த பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்திற்கும் அதிகமாக நன்மைகளைத் தருகிறது.
தசை, எலும்புகள் வலுப்பெற...
இந்த பயிற்சிகள் உங்கள் தசை மற்றும் எலும்புகள் வலிமை பெற உதவுகிறது. மேலும் இது முதுகு வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. எனவே, நீங்களும் உடல் எடையைக் குறைத்து, வலிமையுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சரியான உடற்பயிற்சி நிபுணரின் வழிகாட்டுதலின் படி இந்த பயிற்சிகளைச் செய்யுங்கள்.