பல்வேறு நோய்களை குணமாக்கும்  "அமுக்கரா சூரணம்" பற்றி உங்களுக்கு  தெரியுமா?  

Published : Aug 23, 2023, 11:39 AM ISTUpdated : Aug 23, 2023, 11:43 AM IST
பல்வேறு நோய்களை குணமாக்கும்  "அமுக்கரா சூரணம்" பற்றி உங்களுக்கு  தெரியுமா?  

சுருக்கம்

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அமுக்ரா சூர்ணம் உதவுகிறது. மேலும் இதன் பயன் குறித்து இங்கு பார்க்கலாம்.

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவம் ஆகும். நாம் உண்ணும் உணவே நமக்கு சிறந்த மருந்தாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே சித்த மருத்துவம் உருவானது. பொதுவாக இயற்கையாகவே 
கிடைக்ககூடிய புல், மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ போன்ற மூலிகைப் பொருட்களை கொண்டும், பால், தேன், சீனி, நெய் ஆகியவற்றைக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும். ஆங்கில மருத்துவத்தை விட பெரும்பாலானோர் சித்த மருத்துவத்தையே நாடுகின்றனர்.

இதையும் படிங்க: அன்லிமிடெட் பலன்களை உடலுக்கு அள்ளித் தரும் அஸ்வகந்தா!

உடல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நோய்க்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற முடியும். அந்த வகையில், சித்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அதிகம் பரிந்துரைக்கும் மருந்து அமுக்கரா சூரணம். இது மிகவும் பயணளிக்கக் கூடிய மருந்து என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

அமுக்கரா சூரணம்:

  • அமுக்கரா சூரண மாத்திரையானது 7 வகை மூலிகை பொருட்களால் செய்யப்பட்ட ஒரு மருந்தாகும். இது அமுக்கரா, மிளகு, கிராம்பு, சிறுநாகம்பூ, சுக்கு, ஏலக்காய், திப்பிலி ஆகியவை கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது.
  • இது வயிற்றுப்புண், இரத்தசோகை, ஈரல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மறதி போன்ற பல்வேறு விதமான நோய்களுக்கு இம்மருந்து வழங்கப்படுகிறது.
  • இந்த அமுக்கரா சூரண மாத்திரை சிக்குன்குனியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற வைரஸ் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
  • இம்மாத்திரையை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தினமும் இரு வேளை பாலில் எடுத்துக் கொள்வது நல்லது. 
  • அதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊற இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
  • இந்த மாத்திரையானது உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை தருவதால் தொடர்ந்து இதனை  எடுத்துக் கொள்ளவது நல்லது.
  • மேலும் நீரிழிவு , ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு இந்த மாத்திரையை எடுத்து கொள்ளலாம். இதனை சாப்பிடும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படிங்க: அற்புதம் நிறைந்த அஸ்வகந்தா...பெண்களே இது உங்களுக்கானது தான்..!!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க