நமது உடலில் பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும் ஒரு சிறிய சுரப்பி - 'தையராய்டு'. இது சரியாக வேலை செய்யவில்லை என்றால் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இன்று பலரும் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இந்த தையராய்டு குறைபாடு. உடல் எடை அதிகரிப்பு, அதீத சோர்வு, மன அழுத்தம் என பல பிரச்சனைகளுக்கு இதுவே மூலக்காரணமாக அமைகிறது.