இந்தக் கிழமையில் தான் மாரடைப்பு அதிகமாக வருதாம்!! எதுக்குனு காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!! ஆய்வில் பகீர் தகவல்

By Ma riya  |  First Published Jun 16, 2023, 12:33 PM IST

பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் மாரடைப்பு குறிப்பிட்ட ஒருநாளில் தான் அதிகம் வருவதாக தெரிய வந்துள்ளது. 


பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மாரடைப்பு குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இதில் அவர்களுக்கு தெரியவந்த விஷயம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைகாலமாக மாரடைப்பு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் திங்கட்கிழமையின் போது தான் அதிகமாக மனிதர்களை பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

உலகம் முழுக்க உள்ள மக்களுக்கு இடையே சில ஒற்றுமைகள் காணப்படும். இனம், மொழி கடந்த அந்த ஒற்றுமை தான் திங்கள் கிழமை. பெரும்பாலான நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருக்கும். அதற்கு மறுநாளான திங்கள்கிழமை அலுவலகம், பள்ளி போன்றவை இயங்கும். அதனால் தான் பெரும்பாலானோருக்கு பள்ளி காலத்தில் இருந்தே 'திங்கள்கிழமை' என்றால் ஆகாது. வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சில நிமிடங்களிலே திங்கள்கிழமை விரைவாக வந்துவிடுவது போல தான் பலரும் உணர்வார்கள். வார விடுமுறை நாளை மகிழ்ச்சியாக கழித்த பின்னர் மறுபடியும் திங்கட்கிழமை வழக்கமான பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் வெகுசிலர் தான். 

Tap to resize

Latest Videos

திகில் திங்கள்கிழமை!!

நம் எல்லோருக்கும் இந்த உணர்வு நிச்சயமாக வந்திருக்கும். இங்கு தான் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டன் அயர்லாந்தில் இருக்கும் பெல்ஃபாஸ்ட் ஹெல்த் நிறுவனத்துடன் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் கல்லூரி சேர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் உலகம் முழுக்க உள்ள 10 ஆயிரம் இதய நோயாளிகளை கண்காணித்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.  

அந்த முடிவுகளின்படி, மாரடைப்பு பாதிப்பு அதிகமாக திங்கள்கிழமை அன்று ஏற்படுவதாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை வேலைக்கு செல்ல வேண்டும் என்ற மன அழுத்தம் பலருக்கு மாரடைப்பை கொண்டு வருகிறது. பொதுவாக மற்ற நாட்களை விட திங்கள்கிழமைகளில் அதிகமாக மன அழுத்தம் ஏற்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும், உயர் ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 

மாரடைப்பு தடுக்க வழிகள்: 

இந்த மாதிரியாக ஏற்படும் மாரடைப்பைத் தடுக்க அலுவலக வேலையையும், சொந்த வாழ்க்கையும் தனித்தனியாக கையாள கற்றுக் கொள்ள வேண்டும். அலுவலக பிரச்சனைகளை வீட்டிற்கு வரும்போது சிந்திக்கக் கூடாது. அலுவலக வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே சமநிலையை பேண வேண்டும். 

போதுமான உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுதல் போன்றவை மாரடைப்பு ஏற்படுத்தும் மன அழுத்தத்தை குறைக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு திங்கள்கிழமையும் வேலைக்கு செல்வது கட்டாயமாகி போன சூழலை மனதை அதற்கு பழக்கவேண்டும். இல்லையென்றால் வீண் சிந்தனைகள் ஏற்படும். 

இதையும் படிங்க: தினமும் 2 பல் பூண்டு மட்டும் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் உங்க 'பிபி' கட்டுக்குள் வரும்..!!

click me!