திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது: கேரள நீதிமன்றம்

By SG Balan  |  First Published Jun 14, 2023, 3:57 PM IST

திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்த ஒரு ஜோடி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தபோது, அவர்கள் கோரிக்கை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.


லிவிங் டுகெதர் (Living together) எனப்படும் திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உறவுகளை திருமண உறவு என்று சட்டம் அங்கீகரிக்கவில்லை என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தனிப்பட்ட அல்லது மதச்சார்பற்ற சட்டங்களின்படி நடைபெறும் திருமணங்களை மட்டுமே சட்டப்பூர்வ திருமணமாகக் கொள்ள முடியும் என்றும் சொல்லி இருக்கிறது.

தங்களுக்குள் கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஒன்றாக வாழும் தம்பதியினர் அதை திருமணம் என்று கோரவோ அல்லது அதன் அடிப்படையில் விவாகரத்து கோரவோ முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அவர்களது திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Latest Videos

அமைச்சரை அலறவிடும் அமலாக்கத்துறை உருவானது எப்படி? அதன் அதிகாரங்கள் எவை?

திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்துவந்த ஒரு ஜோடி விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தபோது, இந்தக் கருத்துகளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடும்ப நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு ஜோடி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதிகள் ஏ முகமது முஸ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்தது.

இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த ஒரு ஜோடி 2006ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இப்போது 16 வயது குழந்தையும் உள்ளது. இப்போது அவர்கள் தங்கள் உறவைத் தொடர விரும்பாததால், விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தை நாடினர்.

மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 9 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!

அவர்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், "லிவ்-இன் உறவை திருமணம் என்று சட்டம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. தனிப்பட்ட சட்டப்படி அல்லது சிறப்பு திருமணம் போன்ற மதச்சார்பற்ற சட்டத்தின்படி திருமணம் நடந்தால் மட்டுமே சட்டம் அங்கீகரிக்கிறது" என்று தெரிவித்துவிட்டது.

அவர்கள் திருமணமானதாக அங்கீகரிக்க உரிமை கோருவதற்கும், விவாகரத்து கோருவதற்கும் சட்டத்தில் இடம் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அத்தகைய உறவு வேறு இடங்களில் தகுதி பெறும் சூழ்நிலை இருக்கலாம், ஆனால் விவாகரத்து நோக்கத்திற்காக அதனை அங்கீகரிக்க முடியாது எனவும் கூறினர்.

புதிய கண்டிஷன் போடும் டிசிஎஸ்; வேலையே வேண்டாம் என தூக்கி எறிந்த பெண் ஊழியர்கள்!

click me!