தொந்தரவு செய்யும் உறவினர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இனிமேல் உறவினர்களால் எந்த மன அழுத்தமும் ஏற்படாது.
எந்த உறவின் அடித்தளமும் நம்பிக்கையில் தான் தொடங்கும். ஆனால் சில உறவினர்களுக்கு இந்த உறவின் மதிப்பெல்லாம் தெரியாது. நம்மை அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள் என்றே தெரியாமல் கூட சில நேரம் தொந்தரவு செய்வார்கள். கேட்கக் கூடாத தனிப்பட்ட கேள்விகளை கேட்பது, தேவையில்லாமல் நம் முடிவுகளில் தலையிடுவது, புரணி பேசுவது என உறவினர்களின் தொந்தரவுக்கு அளவே இருக்காது. அவர்களுக்கு வாழ்க்கையில் பிறரைத் தொந்தரவு செய்வதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. அவர்களிடமிருந்து விடுபட விரும்பினால், நிச்சயமாக இந்த டிப்ஸ் உதவும்.
உங்கள் உறவினர்கள் சில விஷயங்களில் அவசியமின்றி வாதிடுகிறார்கள் அல்லது சண்டையிடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த விஷயத்தில் இருந்து விலகிவிடுங்கள். உதாரணமாக உங்களுடைய உறவினர்கள் நீங்கள் செட்டில் ஆனதைப் பற்றி பேசும்போதெல்லாம், உங்கள் முகத்தில் ஒரு பெரிய புன்னகையை வரவழைத்து, 'ஓ.. அதை பற்றி பேச வேண்டும். இப்போது ஒரு அவசர வேலை இருக்கிறது' என விலகிவிடுங்கள். ஒவ்வொரு முறையும் இதை சொல்லி சொல்லி விலகுங்கள். இதையே சொல்லாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்கு சொல்லுங்கள். உங்கள் உறவினர்களே சோர்வடைவார்கள்.
இதையும் படிங்க: கணவன் மனைவி இந்த 3 விஷயங்களை பண்ணிட்டா போதும்.. கடவுளே வந்தாலும் அவங்கள பிரிக்க முடியாது!!
கோபத்தை கட்டுப்படுத்துங்க!
நீங்கள் உங்கள் உறவினரிடம் பேசும் போதெல்லாம், விரைவாக உணர்ச்சிவசப்படுவீர்கள். கோவம் தலைக்கேறும். இது ஒரு சாதாரணமானதுதான். பிடிக்காத விஷயங்கள் நடக்கும்போது இப்படி நடக்கும். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஆழ்ந்த சுவாசம்.. மூச்சை இழுத்து விட்டு கொஞ்ச நேரம் நடைபயிற்சி செல்லுங்கள். பின்னர் திரும்பி வந்து உரையாடலை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள். கோபம் தணிந்துவிடும்.
பகை வேண்டாம்:
சில நேரங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் சிரமப்படுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் மற்றவர்களுடன் விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள். உங்கள் உறவினரிடம் இதுபோன்ற ஏதாவது இருந்தால், அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எல்லாம் சாதாரணமாக இருந்தால், அதன் பிறகும், அவர் உங்களை நச்சரித்தால், நீங்கள் அவரிடம் இடைவெளியை கடைபிடியுங்கள். உங்கள் உறவினருடன் ஒரு எல்லையை கடைபிடியுங்கள். எப்போதும் உங்கள் இதயத்தில் நட்பையோ, பகையையோ வைத்துக் கொள்ளாதீர்கள். இதன் மூலம் நீங்களும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
வெளிப்படையா சொல்லிடுங்க!
உங்கள் உறவினரின் நடத்தை உங்களைத் தொந்தரவு செய்தால், உங்கள் உறவினர்களுக்கு எல்லைகளை அமைத்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பு வெறுப்புகளைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களின் நடத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதையும் வெளிப்படையாக சொல்லலாம். இதன் மூலம், உங்கள் உறவினர்கள் தங்கள் வார்த்தைகளை, நடத்தையைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பார்கள்.
இதையும் படிங்க: பெண்களை ஈர்க்கும் ஆண்கள் யார் தெரியுமா? நீங்க இப்படிப்பட்ட ஆளா இருந்தா உங்களத்தான் விரும்புவார்களாம்!!