கோடைகாலத்தில் தான் மாங்காய் அதிகம் கிடைக்கும். இந்த நேரத்தில் அதை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை இங்கு காணலாம்.
மாங்காயில் வைட்டமின் ஏ, பி6, சி, கே ஆகியவை அதிகம் உள்ளது. இதில் பொட்டாசியம் மாதிரியான தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. பச்சை மாங்காயை உண்பதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகளை காணலாம்.
மாங்காய் நன்மைகள்:
கோடைகாலத்தில் மாங்காய் உண்பது உடலை ஈரப்பதமாக்குகிறது. இதில் சோடியம் குளோரைடு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. கோடைகாலத்தில் அதிக வியர்வையால் இழக்கும் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப மாங்காய் உதவுகிறது. உடனடி ஆற்றலை அளித்து சோர்வை தடுக்கும்.
மாங்காய் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மாங்காய் உண்பதால் வைட்டமின்கள் ஏ, சி ஆகியவற்றின் தினசரி தேவையை பூர்த்தி செய்யலாம். நம் உடலில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் தொகுப்புக்கு முக்கியமானது.
மாங்காயில் கொலாஜன் உருவாக உதவும் வைட்டமின் சி உள்ளது. சருமத்திற்கு நல்லது. உங்கள் எலும்புகளை வலுப்படுத்த வைட்டமின் கே முக்கியமானது. மாங்காய் உண்ணும்போது எலும்புகள் வலுவாகின்றன.
ஒரு நடுத்தர அளவு கொண்ட மாங்காயில் சுமார் 2.64 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிக விகிதத்தில் உள்ளது என நிபுணர் சொல்கின்றனர். ஆகவே இதை உண்பதால் மலச்சிக்கல் சரியாகும்.
மாங்காய் ரெசிபி:
பச்சை மாங்காய் சட்னி செய்வது எப்படி?
செய்முறை
தேவையான அனைத்து பொருட்களையும் பாதியாக வேகவைத்து மென்மையாகும் வரை வதக்கிவிடுங்கள். இதை ஆறவைத்து பின்னர் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சூடான இட்லி, தோசை உடன் பரிமாறவும்.
பச்சை மாங்காய் பானம்:
செய்முறை
மாங்காவை நன்கு கழுவி, அதை மென்மையாகும் வரை அழுத்தி வேக வைக்கவும். வெந்த பின்னர் அதை கொஞ்சம் ஆறவிட்டு தோலை நீக்கி கூழ் பதத்தில் கொண்டு வாருங்கள். அதிலிருந்து மென்மையான ப்யூரியை உருவாக்கவும்.
இதனிடையே ஏலக்காய் மற்றும் புதினா இலை சேர்த்து 1/3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் மல்லித்தூள், இஞ்சி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். புதிய புதினா இலைகளால் டம்ளரை அலங்கரித்து, குளிர்ச்சியாக குடியுங்கள்.
இதையும் படிங்க: தாய்ப்பால் அதிகமாக சுரக்க பெண்கள் பால் ரொம்ப குடிக்க வேண்டுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
பச்சை மாங்காய் கேரள மீன் குழம்பு:
செய்முறை:
மீன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து உப்பு மஞ்சள் சேர்த்து தனியாக வைக்கவும். தேங்காய் துருவல், பாதி வெங்காயம், பெருஞ்சீரகம், அனைத்து மசாலாப் பொடிகளையும் நன்றாக அரையுங்கள். ஒரு கடாயில், அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், மாங்காய் துண்டுகள், நசுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி மிதமான தீயில் கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன், மீன் துண்டுகளை சேர்த்து ஒரு மூடியால் மூடி, குழம்பு கெட்டியாகும் வரை 5 முதல் 8 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும். இதை சாதம், தோசை, சப்பாத்திக்கு கொடுக்கலாம்.
இதையும் படிங்க: என்றும் இளமையாக வைத்திருக்கும் 10 பழங்கள்!!