Betel nuts: தினமும் 3 வெற்றிலைகள் சாப்பிட்டால் போதும்: பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்!

By Dinesh TG  |  First Published Nov 5, 2022, 6:36 PM IST

இன்று நாம் காணப்போவது வெற்றிலையின் அளப்பரிய பலன்கள் பற்றி தான். வெற்றிலை அதிகளவிலான மருத்துவ நன்மைகள் மற்றும் மற்ற பிற ஆரோக்கிய நன்மைகளை பெற்றுள்ளது.


இயற்கையில் கிடைக்கும் அனைத்துமே நமக்கு பல விதங்களில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இயற்கை நமக்களித்த உணவுகளை சரியாக சாப்பிட்டாலே போதும். நோய் என்று ஒன்று நம்மை அண்டாமல் தள்ளியே நிற்கும். அவ்வரிசையில் இன்று நாம் காணப்போவது வெற்றிலையின் அளப்பரிய பலன்கள் பற்றி தான். வெற்றிலை அதிகளவிலான மருத்துவ நன்மைகள் மற்றும் மற்ற பிற ஆரோக்கிய நன்மைகளை பெற்றுள்ளது.

வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

Latest Videos

undefined

வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை அல்லது கருப்பு வெற்றிலை, வெள்ளை வெற்றிலை அல்லது சாதாரண வெற்றிலை, கற்புரவெற்றிலை போன்ற பல வகைகள் உள்ளன. இதில் பொட்டாசியம், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, அயோடின் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிலையை தினந்தோறும் சாப்பிட்டால், உடலுக்கு பல ஆரோக்கியப் பலன்கள் கிடைக்கும். இப்போது வெற்றிலையை தினசரி சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

மூட்டு வலி & கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்கும் ''சாமை- பூசணிக்காய் தோசை''!

வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள்

  • சிறிதளவு வெற்றிலைகளைத் தண்ணீரில் போட்டு, அதனுடன் சீரகம் மற்றும் லவங்கப் பட்டை ஆகியவை சேர்த்து சூடு செய்து, தினமும் 1 முதல் 2 முறை குடித்து வந்தால், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • வெற்றிலையை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், வெளியில் இருக்கும் புண்கள் மற்றும் வயிற்றுப் புண்கள் ஆறும்.
  • விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்கள், தினந்தோறும் 2 அல்லது 3 வெற்றிலைகளை சாப்பிட்டால் போதும் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். 
  • மூட்டுவலி இருப்பவர்கள் ​வெற்றிலையைச் சாறாக அரைத்து, வலி இருக்கின்ற இடத்தில் தினந்தோறும் தடவி வந்தால், ஒரு சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் காணலாம். 
  • ​வெற்றிலையில் இயற்கையாகவே இருக்கும் வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாக செயல்படுவதால், தேவையற்ற ஏப்பத்தை சரி செய்கிறது.  
  • வெற்றிலையை தினசரி சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், இது செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதால் தேவையற்ற உணவுகள் வயிற்றில் தங்குவதை தவிர்க்க முடியும். 
  • தினசரி 3 முறை வெற்றிலையை அரைத்து, அதன் சாற்றை விழுங்கினால், தொண்டையில் இருக்கும் புண்கள் வெகு விரைவாக குணமடையும்.
  • வெற்றிலையில் சிறிதளவு கடுகு எண்ணெயைத் தடவி, அதனை சூடு செய்து, அதை எடுத்து இளஞ்சூட்டில் நெஞ்சின் மீது வைத்தால் சளி மற்றும் இருமல் ஆகிய இரண்டும் குறையும். 
click me!