இந்த நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டால் இனி கண்டிப்பா வாழை இலைகளில் தான் சாப்பிடுவீங்க..

By Ramya s  |  First Published Jul 31, 2023, 8:02 AM IST

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


இந்தியாவில் வாழை இலையில் உணவு பரிமாறும் பாரம்பரியம் நீண்ட நெடுங்காலமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வாழை இலையில் உணவு உண்பது மிகவும் ஆரோக்கியமானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் வாழை இலைகளில் உணவு பரிமாறப்படுகிறது. தற்போதைய நவீன காலக்கட்டத்தில் இந்த வாழை இலைகளில் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழை இலைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, வாழை இலையில் உணவு பரிமாறப்படும் போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றன. வாழை இலையில் அதிக அளவு பாலிஃபீனால்கள் உள்ளன, அவை இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகளாகும். இவை பல தாவர அடிப்படையிலான உணவுகள் மற்றும் பச்சை தேயிலைகளில் காணப்படுகின்றன. வாழை இலையில் பரிமாறப்படும் உணவு பாலிபினால்களை உறிஞ்சிவிடும், இது பல வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்கிறது.

Tap to resize

Latest Videos

உணவில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் அவற்றில் இருப்பதாக கூறப்படுகிறது. வாழை இலைகளில் உணவு சாப்பிடுவதால் தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு சருமம் பளபளப்பாக மாறும். 

மேலும் உடலில் உள்ள பித்த அளவை குறைப்பதுடன், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வாழை இலைகள் உதவுகிறது. தலைவலி, தோல் நோய்கள், வயிற்றுப்புண் ஆகியவற்றின் தீவிரம் குறையவும் வாழை இலைகளில் உணவருந்தலாம். அதே போல் வாழை இலைகளில் உணவு உண்பதால் செரிமான பிரச்சனைகளும் குறைய தொடங்கும். பசி உணர்வை தூண்டி, செரிமான சக்தியை அதிகரிக்க வாழை இலை உதவுகிறது. ஏனெனில் உணவு செரிமானத்திற்கு தேவையான அனைத்து கூறுகளும் வாழை இலையில் உண்டு. 

உணவின் சுவை தெரியாமல் சுவையின்மை நோயாளிகள் வாழை இலையில் உணவு உண்பதால், உணவின் சுவையை அறிந்து கொள்ள முடியும். உடல் பலவீனமானவர்கள் வாழை இலையில் உணவு உண்பதால் உடல் பலமடையும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருகும் என்பதால் ஆண்மை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள், வாழை இலையில் உணவருந்தலாம். து மற்ற பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக மிகவும் சுகாதாரமானது. சாதாரண பாத்திரங்களை சோப்பைப் பயன்படுத்தி கழுவ வேண்டும் மற்றும் கழுவிய பிறகும் பாத்திரங்களில் சோப்பின் தடயங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அந்த தடயங்கள் உங்கள் உணவை மாசுபடுத்தும். ஆனால் வாழை இலைகளில் இந்த பிரச்சனை இல்லை.இலைகளில் பரிமாறப்படும் உணவுகளுக்கு நுட்பமான மற்றும் மண் சுவைகளை சேர்க்கிறது. 

சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது நல்லதா, கெட்டதா? தெரிஞ்சுக்க இதை படிங்க

click me!