ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த உயர் ரத்த அழுத்த பிரச்சனை, இன்று இளைஞர்களிடையே கூட பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
உயர் ரத்த அழுத்தம் என்பது தற்போது வேகமாக அதிகரித்து வரும் உடல்நல பிரச்சனையாக மாறி உள்ளது. இன்றைய உட்கார்ந்து கொண்டே வேலை செய்யு வாழ்க்கை முறையில், 30 வயதுக்கும் குறைவானவர்களுக்கு கூட இரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த உயர் ரத்த அழுத்த பிரச்சனை, இன்று இளைஞர்களிடையே கூட பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
ரத்த அழுத்தம் ஒரு நபரை அதிக உடல்நலப் பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது. பலர் தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்பதையே தற்செயலாக தான் கண்டுபிடிப்பார்கள் என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தெரிவித்துள்ளார். 120/80 என்ற அளவு என்பது சாதாரணமாகக் கருதப்படுகிறது, அதேசமயம் 140/90 என்ற அளவானது உயர் ரத்த அழுத்தத்திற்கு முந்தையதாகக் கருதப்படுகிறது, மேலும் 140/90 க்கு மேல் உயர் ரத்த அழுத்தமாக கருதப்படுகிறது.
undefined
ஆண்களே மீண்டும் வெற்றிலை பாக்கு போட ஆரம்பிங்க.. ஏன்னா அவ்வளவு நன்மைகள் இருக்கு..
பல உணவுகள் மற்றும் உணவுக் காரணிகள் இரத்த அழுத்தத்தை பாதிக்கின்றன. அதிக சோடியம் கொண்ட ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக எடை அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதிகமாக புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் நபர்களுக்கு யர் இரத்த அழுத்தம் இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்க 7 குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.
கோதுமை புல் சாறு: இது மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த ஆதாரமாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அமுதம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தாதுக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன மேலும், கோதுமை புல் சாறு உங்கள் உடலை சுத்தப்படுத்தி ஊட்டமளிக்கும் என்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உணவில் பொட்டாசியத்தை அதிகரிக்கவும்: பொட்டாசியம் நமது உடலின் அனைத்து செல்களின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. அதிக அளவு சோடியம் உட்கொள்வதால் உடலில் நீர் தேங்கி நிற்கிறது. குறைந்த பொட்டாசியம் உட்கொள்ளல் மற்றும் அதிக சோடியம் உட்கொள்வதால் தமனிச் சுவர்களில் அழுத்தம் அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட பால்: இது கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும். இவை இரண்டும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன, மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இது ஒரு நல்ல உணவாக அமைகிறது.
காய்கறிகள்: உயர் ரத்த அழுத்தத்திற்கான சிறந்த வழி காய்கறிகளை உணவில் அதிகரிக்கவும். காய்கறிகள், கீரை வகைகள் போன்றவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்
தேங்காய் தண்ணீர்: இதில் பொட்டாசியம் உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து குடித்து வர, ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறையும்.
பூண்டு: உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் பூண்டை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது அடினோசின் சேர்மத்தையும் கொண்டுள்ளது, வெறும் வயிற்றில் நறுக்கிய பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.
ஒரே இலை பல பிரச்சனைகளுக்கு தீர்வு.. குப்பைமேனி இலையில் இத்தனை நன்மைகள் இருக்கா?
தயிர் : ஒரு நாளைக்கு ஒரு கப் தயிர் உங்கள் உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கும். அதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
உணவுடன் சேர்த்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஒரு சிறந்த வழி உடற்பயிற்சி ஆகும். அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கை முறை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில் வழக்கமான உடற்பயிற்சி அதைக் குறைக்கிறது. உப்பு உட்கொள்வதைக் குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஒரு நல்ல யோசனை என்றாலும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் எடையைக் குறைப்பது உயர் ரத்த அழுத்தத்திற்கான சிறந்த தீர்வாகும்.