சில வீட்டு வைத்தியங்கள் மூலமாக கறை படிந்த பற்களை வெண்மையான பற்களாக மாற்ற முடியும். 1 ரூபாய் செலவு செய்யாமலே வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கறை படிந்த பற்களை வெண்மையாக எப்படி மாற்றுவது? என்னென்ன பொருட்களை எப்படி உபயோகிப்பது? போன்ற பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி உண்டு. ஆனால் இன்று எவரும் வாய் விட்டு சிரிக்கவே தயக்கம் காட்டுகின்றனர் அல்லது யோசிக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் பற்களில் கறை பிடித்து காணப்படுவதால். அனைவருக்கும் முத்து போன்ற பற்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். ஆனால் வயது கூட கூட பற்களில் பல்வேறு காரணங்களால் கறை படிந்து போகிறது.
இதற்கு பிரதான காரணமாக இருப்பது மோசமான பல் சுகாதாரம், சாப்பிடும் உணவுகள், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவைகளால் ஏற்படும். ஒரு சிலருக்கு மரபியல் ரீதியாக அல்லது பிற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் கூட ஏற்படும். இப்படி பல விதமான காரணங்களால் பற்களில் மஞ்சள் கறை படிகிறது.
இப்படி மஞ்சள் கறை படிந்த பற்களை வெள்ளையாக்க டென்டிஸ்ட்களிடம் சென்று ஆயிரக் கணக்கில் செலவு செய்து நவீன சிகிச்சைகள் பெற நம் அனைவராலும் இயலாது.
சில வீட்டு வைத்தியங்கள் மூலமாகவும் கறை படிந்த பற்களை வெண்மையான பற்களாக மாற்ற முடியும். 1 ரூபாய் செலவு செய்யாமலே வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கறை படிந்த பற்களை வெண்மையாக எப்படி மாற்றுவது? என்னென்ன பொருட்களை எப்படி உபயோகிப்பது? போன்ற பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வெண்மையான பற்கள் பெறவதற்கு:
ஆயில் புள்ளிங் :
பற்களை பளபளவென வைத்துக் கொள்ள தேங்காய் எண்ணெய் நல்ல தேர்வாக இருக்கும். இதை பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்து வர வெண்மையான பற்களை தருகிறது. தவிர பல் ஆரோக்கியத்தையும் ஈறுகளின் அழற்சியையும் போக்க உதவுகிறது.
undefined
பற்களை பளிச்சிட வைக்கும் தேங்காய் எண்ணெய்யை சிறிது எடுத்து வாயில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் வரை (gargling ) வாய் கொப்பளித்து செய்து வெளியே துப்ப வேண்டும். பின் சாதாரண தண்ணீரைப் உபயோகப்படுத்தி வாயை கொப்பளிக்க வேண்டும்.
பின் எப்போதும் போல் பல் துலக்க வேண்டும். வெண்மையான பற்களைப் பெறுவதற்கு இதை தினமும் செய்து வரலாம். இதை செய்வதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.
பேக்கிங் சோடா :
இதில் இயற்கையாகவே பற்களை வெண்மையாக மாற்ற செய்யும் பண்புகள் கொண்டுள்ளது. பேக்கிங் சோடாவில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து பல் துலக்க வேண்டும். பின் தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இதனை வாரத்தில் 3 நாட்கள் செய்து வர (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) வித்தியாசத்தை உணரலாம் .
ஆப்பிள் சைடர் வினிகர் :
ஆப்பிள் சைடர் வினிகரில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளதால் பற்களில் இருக்கும் கறைகளை அகற்றவும் பற்களை வெண்மையாக மாற்றவும் பெரிதும் உதவுகிறது. 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து கொண்டு அதனை நிமிடம் வாயில் வைத்து கொப்பளித்து விட்டு எப்போதும் போன்று பல் துலக்க வேண்டும்.
வீட்டில் உள்ள இவற்றை பயன்படுத்தி வந்தாலே நமது பற்களில் படிந்துள்ள கறைகள் நீங்கி,வெண்மையான பற்களை பெற முடியும். நீங்களும் முற்சி செய்து பலன் அடையுங்கள்!