Towel: தினமும் நீங்கள் பயன்படுத்தும் டவலை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம்! மீறினால் ஆபத்து உங்களுக்கு தான்!

By Dinesh TG  |  First Published Dec 31, 2022, 1:22 PM IST

நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை வேறு யாருக்குமே கொடுக்க கூடாது. அப்படியான ஒரு பொருள் தான் டவல். டவலை பரிமாறிக் கொண்டால், அது பல விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


நம்மில் சிலருக்கு நாம் பயன்படுத்தும் சில பொருட்களை வேறு யாருக்கும் கொடுக்கமாட்டார்கள். ஆனால், ஒரு சிலரோ அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். இது அவரவர்களின் இயல்பு மற்றும் தனிப்பட்ட முடிவாகும். ஆனால் நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை வேறு யாருக்குமே கொடுக்க கூடாது. அப்படியான ஒரு பொருள் தான் டவல். டவலை பரிமாறிக் கொண்டால், அது பல விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தினசரி பயன்படுத்தும் டவல்

Latest Videos

undefined

தினந்தோறும் நீங்கள் பயன்படுத்தும் டவலை, வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம். அப்படி டவலை கொடுத்தால், உங்களால் அவருக்கும் அவரால் உங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும். அப்படி என்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வைரஸ் கிருமி

பெண்களின் பிறப்புறுப்பில் வைரஸ் கிருமியால் மரு மாதிரி ஒன்று வரும். இதற்கு ஹெச்.பி.வி. எனும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தான் முக்கிய காரணமாகும். இந்த வைரஸால் பாதிக்கப்படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று பாலியல் உறவுகளினால் பாதிக்கப்படுவார்கள். மற்றொன்று உடல் தொடர்புகளின் மூலம் இந்த பாதிப்பு உண்டாகும். இந்த வைரஸில் 99% பாதிப்பு பாலியல் உறவுகளினால் மட்டுமே அதிகமாக நிகழ்கிறது. மேலும், இந்த வைரஸ் இருப்பவர்கள் பயன்படுத்திய டவலை, அடுத்தவர் பயன்படுத்தினால் அவர்களுக்கும் இந்த வைரஸ் மிக எளிதாக தொற்றிக் கொள்ளும். மரு வடிவில் உள்ள இந்த வைரஸில் இருந்து வருகின்ற திரவம் காய்வதற்குள் டவலைப் பயன்படுத்தினால் நிச்சயமாக தொற்றுப் பரவி விடும்.

Bad Breath: வாய் துர்நாற்றத்தை தடுக்க அசத்தலான டிப்ஸ் இதோ!

செய்யக் கூடாதவை

பிறப்புறுப்பில் உள்ள இந்த மருவைக் கிள்ளக் கூடாது. கிள்ளினால் மருவிற்குள் இருந்து வரும் திரவம், ஒரு சொட்டு பட்டால் கூட பெண்ணுறுப்பிலோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் முழுவதுமாக பரவி விடும் அபாயமும் இருக்கிறது. இருப்பினும் இது பற்றி நீங்கள் பெரிதாக பயப்படத் தேவையில்லை. உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி தான் இதற்கு முக்கிய காரணம். ஆனால், மரு பெரிதாகிக் கொண்டே போனால் சரும மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

இதனைக் குணப்படுத்த ஒரு க்ரிம் பயன்படுத்தலாம். ஆனால் அதனைப் பயன்படுத்தும் போது வெளியிடங்களில் படாமல், மரு உள்ள இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

click me!