மிகவும் அரிதாக ஏற்படும் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாடு, உங்களுடைய உயிரையே பதம் பார்த்துவிடும். அப்படிப்பட்ட ஊட்டச்சத்து என்ன? அதனால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? தெரிந்துகொள்ளலாம், விவரமாக..!!
உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு நாள்பட்ட நிலை. இதனால் உங்களுடைய இருதயம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தினசரி உடல் செயல்பாடுகளை பொறுத்து, இரத்த அழுத்தம் மாறி மாறி இருக்கும். இது இயல்புக்கு மீறி செல்லும் போது உயர் ரத்த அழுத்த நிலை உருவாகிறது. சாதாரண இரத்த அழுத்தம் 120/80 மிமீ Hg அல்லது அதற்கும் குறைவாக இருக்கும். ரத்த அழுத்தம் 180/120 mm Hg க்கும் அதிகமாக இருந்தால், அது உயர் ரத்த அழுத்தமாகிறது. இதை சரிசமமாக பராமரிக்க பொட்டாசியம் என்கிற ஊட்டச்சத்து முக்கியமாக தேவைப்படுகிறது. அதனுடைய பலன்கள் என்ன? ஒருவேளை உடலில் குறிப்பிட்ட ஊட்டச்சத்தின் அளவு குறைவாக இருந்தால் என்ன செய்யலாம்? உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
பொட்டாசியம்
undefined
உடலுக்கு தேவைப்படக் கூடிய முக்கியமான சத்துக்களில் ஒன்று பொட்டாசியம். இதன்மூலம் நம் உடலிலுள்ள செல்களில் திரவ பராமரிப்பு நிலைபெறுகிறது. இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்துகிறது, தசைகள் மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேலும் புரதத்தை ஒருங்கிணைப்பதற்கும் கார்போஹைட்ரேட்டுகளை வளர்சிதைமாக்குவதற்கும் பொட்டாசியம் முக்கியமானது. பொட்டாசியம் இரத்த நாளங்களின் சுவர்களைத் தளர்த்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் தசைப்பிடிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
பொட்டாசியம் குறைபாட்டுக்கான அறிகுறி
உடலின் செயல்பாட்டுக்கு பொட்டாசியம் மிகவும் இன்றியமையாதது ஆகும். ஒருவேளை உங்களுடைய உடலில் பொட்டாசியம் இருப்பில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதை குறிப்பிட்ட சில அறிகுறிகள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். அதன்படி மலச்சிக்கல், தவிர்க்கப்பட்ட இதயத் துடிப்பு அல்லது படபடப்பு போன்ற உணர்வு, சோர்வு, தசை சேதம், தசை பலவீனம் அல்லது பிடிப்பு, கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பெட்டாசியம் குறைபாட்டை கண்டறிவது எப்படி?
அறிகுறிகளைக் கண்டறிவதைத் தவிர, ரத்தப் பரிசோதனை மூலம் உடலில் பொட்டாசியம் அளவு குறைந்துபோவதை கண்டறியலாம். அதன்படி குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில், ஒரு சுகாதார நிபுணரை கண்டறிந்து அவருடைய பரிந்துரையில் ஒரு ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். வயது வந்தோருக்கான சாதாரண பொட்டாசியம் அளவு 3.5 முதல் 5.2 mEq/L வரை இருக்க வேண்டும். அதேசமயம் 3 முதல் 3.5 mEq/L வரையிலான பொட்டாசியம் அளவு குறைந்தால் அது ஹைபோகலீமியாவாகக் கருதப்படுகிறது.
கிறிஸ்துமஸுக்கு தயாரிக்கப்படும் விசேஷமான கேக்- தெரியுமா உங்களுக்கு..?
உடலுக்கு பொட்டாசியம் அளவை அதிகரிப்பது எப்படி?
ஒருவருக்கு பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது என்பது அரிதானது. ஆனால் இன்றைய உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் எதுவும் நடக்கலாம். அதனால் இந்த ஊட்டச்சத்தை உடலில் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்ட என்று எதுவும் இல்லை. இருப்பினும், பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 1600 முதல் 2000 mg அளவுள்ள பொட்டாசியம் போதுமானது. பல உணவுகளில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. அதன்படி கீரைகள், பீன்ஸ், கொட்டைகள், பால் உணவுகள், சூரை போன்ற மீன்கள், மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளை உங்களுடைய உணவு நடைமுறையில் சேர்த்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி வாழைப்பழம், ஆரஞ்சு, பாகற்காய், தேன்பழம், பேரீச்சம்பழம், திராட்சைப்பழம் போன்ற பழங்களும் உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியத்தை வழங்குகின்றன. பீன்ஸ், பருப்பு, சோயாபீன்ஸ் மற்றும் லிமா பீன்ஸ் உள்ளிட்ட பருப்பு வகைகளிலும் நிறைய பொட்டாசியம் இடம்பெற்றுள்ளன.