மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை செய்கிறீர்களா..? அந்த பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை..!

By Kalai Selvi  |  First Published Dec 23, 2023, 6:30 PM IST

லேப்டாப் வைத்து எங்கு வேண்டுமானாலும்.. எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம். ஆனால் இதனை மடியில் வைத்து வேலை செய்தால் ஆபத்தான உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


இன்றைய காலகட்டத்தில் லேப்டாப் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிவிட்டது. இதனால் தற்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்துள்ளது. இது ஒரு வகையில் நல்லதுதான் என்றாலும்.. இந்த கேட்ஜெட்டின் உபயோகத்தைப் பொறுத்தது. பலர் லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். இதை செய்வது மிகவும் ஆபத்தானது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இப்படி வேலை செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

குழந்தைகளைப் பெறுவதில் சிரமம்:
லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு குழந்தை பிறப்பது கடினம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் லேப்டாப்புடன் நெருக்கமாகப் பணிபுரிவது கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

Latest Videos

undefined

அதேபோல் ஆண்கள் மடியில் லேப்டாப்பை வைத்து வேலை செய்தால் விந்தணுக்களின் வளர்ச்சி குறையும். இது கருவுறுதலைக் குறைக்கிறது. எனவே டேபிள்களில் இல்லை என்றால் லேப்டாப் ஷீல்டை பயன்படுத்துவது நல்லது.

இதையும் படிங்க:  15 மணிநேரம் தாங்கும் பேட்டரி.. AI-ன் அல்ட்ரா கோர் பிராசஸர்.. பக்காவான அம்சங்களுடன் வரும் ZenBook 14 OLED

தோல் புற்றுநோய்:
லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்தால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. லேப்டாப்பை அந்தரங்க பாகங்களுக்கு அருகில் வைப்பதால் அங்கேயும் கேன்சர் வரலாம்..எனவே பல முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க:  வெறும் ரூ.19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1.. எப்படி வாங்குவது தெரியுமா?

கழுத்து மற்றும் முதுகு வலி:
லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்வது நல்லதல்ல. இதன் காரணமாக, கழுத்து மற்றும் முதுகு பகுதிகள் வளைந்துவிடும். மேலும் அந்தப் பகுதிகளில் வலியையும் உண்டாக்குகின்றன. இது போன்ற தொடர்ச்சியான வேலை நீண்ட கால வலியைத் தரும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கதிர்வீச்சு:
லேப்டாப் எலக்ட்ரோமோட்டிவ் சக்தியை வெளியிடுகின்றன. இவை EMF என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த கதிர்வீச்சு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த கதிர்வீச்சால், பல உடல்நலப் பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

click me!