பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனுடைய சுவை பிடித்துபோய் அதிகளவில் உண்பவர்கள் பலர் உள்ளனர். பூண்டு சாப்பிடுவதால் பலன்கள் இருந்தாலும், அதை அதிகமாக சாப்பிடுவது ஆபத்தில் முடியும் என எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
பல உடல்நல பிரச்னைகளுக்கு பூண்டு சாப்பிடுவதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், சளி, வறட்டு இருமல், உடல் நடுக்கம் போன்ற பிரச்னைகளுக்கு பூண்டு சாப்பிடுவது நல்ல தீர்வை தருகிறது. நாம் அன்றாடம் சமைக்கும் பல்வேறு பொருட்களில் பூண்டும் பிரதானமாக சேர்க்கப்படுகிறது. சாம்பார், ரசம், பொறியல், கூட்டு போன்றவை பூண்டு இல்லாமல் நிறைவடைவது கிடையாது. இதை சேர்த்தால் உணவின் சுவை கூடுவது மட்டுமின்றி, உடல்நலனும் மேம்படுகிறது. ஆனால் அதேசமயத்தில் அதிகளவில் பூண்டு சாப்பிடுவதிலும் ஆபத்து இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
அசிடிட்டி
undefined
இன்றைய காலத்தில் பலரிடையே நீடிக்கும் உணவுப் பழக்கத்தால் அசிடிட்டி பிரச்னை சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது. நீங்களி மீறி சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு உடல்நல உபாதைகளுக்கு வித்திடும். இரைப்பை பிரச்சனை உள்ளவர்கள், வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கும்.
உணர்திறன் கொண்ட உடல்
பலவீனமான அல்லது உணர்திறன் வாய்ந்த வயிறு உள்ளவர்களும் பூண்டை சாப்பிடக்கூடாது. ஏனெனில் பூண்டு சாப்பிடுவதால் அவர்களுக்கு வயிற்று வலி வரும். மேலும் மீண்டும் மீண்டும் கழிவறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் அப்படிப்பட்டவர்கள் பூண்டை விட்டு விலகி இருப்பது மிகவும் நல்லது.
சுவாசப் பிரச்னை
சிலர் சுவாசம் மற்றும் உடல் துர்நாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட சமயத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க பூண்டு சாப்பிடுபவர்கள். ஆனால் அதற்கு பூண்டு எந்தவிதத்திலும் நன்மையை சேர்க்காது. மேலும் வாய்துர்நாற்றம் அதிகரிக்கவே செய்யும். பூண்டு சுவாச பிரச்சனையை அதிகரித்து, உடல் துர்நாற்றத்தையும் அதிகரித்துவிடுகிறது.
சக்கரவள்ளிக் கிழங்கில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..!!
ரத்தத்தை மெலிதாக்கிவிடும்
பொதுவாக, இதய நோய் உள்ளவர்களும் அதுசார்ந்த பிற பிரச்னைகளை கொண்டவர்களும் ரத்தத்தை மெலிதாக்கும் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருவார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் பூண்டை அதிகம் சாப்பிடக்கூடாது. இது உங்கள் இரத்தத்தை மிகவும் மெல்லியதாக மாற்றுகிறது. இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பூண்டின் ஆரோக்கிய நன்மைகள்
பூண்டு அனைவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. பெரிய உடல்நலப் பிரச்சனைகள் இல்லாதவர்களுக்கு பூண்டு உண்மையில் மிகவும் நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது. பூண்டு ஆன்டிபயாடிக் பண்புகளையும் கொண்டுள்ளது, தொற்று நோய்களில் இருந்தும் நம்மை காக்கின்றது. ஆனால் மேலே கூறப்பட்ட பாதிப்பை கொண்டவர்கள் பூண்டை கட்டுப்பாட்டோடு சாப்பிடுவது மிகவும் நன்மையை சேர்க்கும்.