விரல்களை சுற்றியுள்ள தோல் உரிதலுக்கு இதுதான் காரணம்..!!

By Dinesh TG  |  First Published Jan 9, 2023, 12:11 AM IST

விரல்களை சுற்றி இருக்கும் தோல் உரியும் போது பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாவிட்டாலும், வலி உயிர் போய்விடும். இந்த பிரச்னையை தீர்க்க சில வீட்டு வைத்திய முறைகள் பயன்பாட்டில் உள்ளன. 
 


சில நேரங்களில், சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாக்கள் நம் தோலில் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தும். அவ்வாறு விரல்களில் இருக்கும் நுண்கிருமிகள் சருமத்துக்கு நுழைவதால், கரடுமுரடான அல்லது வெட்டுக்காயங்கள் போன்றவை ஏற்படும். இதனால் விரல்களை சுற்றியிருக்கும் சருமம் வறண்டு, விரிசல் அடையும். நம் நகங்களைச் சுற்றியுள்ள தோல் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.

தோல் உரிதலுக்கு இதுதான் காரணம்

Latest Videos

undefined

சுற்றுச்சூழல் காரணிகள் நமது சருமத்தின் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வறண்ட வானிலை, குளிர்காலம் மற்றும் உறைபனி காலநிலை போன்றவற்றால்  நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரிந்துவிடும். அதேசமயத்தில் பருவகால மாற்றத்தால் மட்டுமே ஆரோக்கியமான சருமம் உருவாகும். பலவீனமான தோலை மேலும் வலுவிழக்கச் செய்வதன் மூலம் சுற்றியுள்ள தோல் உரிந்துவிடுகிறது.

நகங்களை கடிக்கக்கூடாது

நகம் கடிப்பதால் தோல் எரிச்சல் மற்றும் தொற்று ஏற்படலாம். இது வெட்டுக்கள் மற்றும் தோல் உரித்தல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இது குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகளவில் ஏற்படும். ஆனால் சில காலநிலை நிலவும் போது, எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். உங்கள் நகங்களைக் கடிப்பதன் காரணமாகவும் விரல்களை சுற்றி தோல் உரிந்துவிடக்கூடும்.

ஊட்டச்சத்து குறைபாடு

உங்கள் உடலில் சில தாதுக்கள் போதுமான அளவு இல்லை என்றால், சருமம் வறண்டு போய்விடும் மற்றும் தோல் மெல்லியதாக மாறிவிடும். இதனால் நகங்களைச் சுற்றியுள்ள தோல் உரிந்து போகும் நிலை ஏற்படலாம். ஒருவேளை உங்களுகு நியாசின் குறைபாடு ஏற்பட்டால், தோல் வறட்சி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். இது நகச்சுத்தி என்று கூறப்படுகிறது.

தினசரி வெந்நீரில் குளிக்கும் ஆண்களே...!! இனி உஷாரா இருங்க..!!

மெனிக்யூர் காரணமா?

சருமத்துக்காக செய்யப்படும் மெனிக்யூர் போன்றவற்றால் நகங்களைச் சுற்றியுள்ள தோல் சேதமடையலாம். சருமம் சேதமடையும் போது, பாக்டீரியா உள்நுழைந்து வெட்டுக்காயங்களை ஏற்படுத்தக் கூடும். ஏற்கனவே வறண்டு உலர்ந்து போன சருமங்கள், இதனால் மேலும் பாதிக்கப்படும். இந்த பிரச்னை எல்லோருக்கும் ஏற்படாது. ஆனால் காலநிலை மாற்றத்தால் சரும பாதிப்புகளை சந்திப்பவர்களுக்கு, தோல் உரிந்து போய்விடும்.

ரொம்பவும் சுத்தம் கூடாது

உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. ஆனால் இதை அதிகளவில் செய்தால், கைகளில் இருக்கும் எண்ணெய் பசை போய்விடும். இதனால் தோலில் எரிச்சல் மற்றும் உரிதல் போன்றவை ஏற்படும். கடுமையான ரசாயனங்கள் கொண்ட தயாரிப்புகள் தோல் எரிச்சல் மற்றும் உரிதலுக்கு வழிவகுக்கும். அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் சில பொருட்களாலும் சருமத்தில் அரிப்பு மற்றும் வறட்சி ஏற்படுகிறது. 

click me!