Bitter gourd: பாகற்காய் நல்லது தான்; ஆனால் அதிகமாக எடுத்து கொள்ள கூடாது! ஏன் தெரியுமா?

By Asianet TamilFirst Published Feb 8, 2023, 1:35 PM IST
Highlights

இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாகற்காய். இதன் அரிய மருத்துவ குணங்கள், பல நோய்களை விரட்டியடிக்க வல்லது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக பயன்படுவது பாகற்காய் தான். 
 

பாகற்காய்

பாகற்காயில் நிறைந்துள்ள அதன் கசப்பு சுவையின் காரணமாக பலருக்கும் பிடிக்காமல் போகிறது. பாகற்காய் அதிக கசப்புத் தன்மை கொண்டது தான். ஆனாலும், எண்ணில் அடங்காத பல ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும், இதனை அதிகளவில் எடுத்துக் கொள்வது ஆபத்தையே தரும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகி விடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வகையில்  தற்போது பாகற்காயை அதிகளவில் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிந்து கொள்வோம். 

பாகற்காயின் பக்கவிளைவுகள்

பாகற்காய் சாறு குடிப்பதால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என்றாலும், இது கல்லீரலை பாதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலங்களில் பெண்கள் பாகற்காய் அதிகமாக சாப்பிடுவது கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடும். ஆகவே கர்ப்பிணிகள் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

இரத்த சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக் கூடாது. இது உங்களின் இரத்த சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம்.  

பாகற்காயை அதிகளவில் எடுத்துக் கொள்வதால், இதயத்தில் இரத்த ஓட்டம் ஒரு புறமாகவே செல்லும். இதன் காரணமாக இரத்த கட்டிகள் மார்பில் உருவாகி, மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தி விடும்.

அளவிற்கு அதிகமாக பாகற்காயை சாப்பிடும் போது வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சீறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

பாகற்காய் சாற்றின் பல பண்புகள், வெப்பநிலையைப் பொறுத்து அமைகிறது. ஆகவே, தவறான முறையில் பாகற்காய் சாறு செய்யப்பட்டால், அது செரிமான அமைப்புக்கு தீங்கினை ஏற்படுத்தி வாந்தி மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Rasavalli tuber: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இராசவள்ளி கிழங்கின் அளப்பரிய நன்மைகள்!

புற்றுநோயைத் தடுக்கும்

கசப்பு பூசணி என அழைக்கப்படும் பாகற்காயில், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வுகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பாகற்காய் சாற்றை சீரான இடைவெளியில் குடித்து வருவது, புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி, புற்றுநோய் கட்டி உருவாவதை தடுத்து நிறுத்துகிறது. மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் இதன் மூலமாக குறைகிறது.

வைரஸ் தடுப்பு பண்புகள்

பாகற்காயில் இருக்கும் சக்தி நிறைந்த வைரஸ் தடுப்பு பண்புகள், கொடிய எச்.ஐ.வி.யின் அறிகுறிகளான வொயிட் ஸ்பாட் சின்ட்ரோம் மற்றும் மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் போன்ற வைரஸ் நோய்களை எதிர்த்து போராட உதவி புரிகிறது.

click me!