சாப்பிட்டு முடிந்ததும் இதைச் செய்து பாருங்கள்- அற்புதம் நடக்கும் நம்புங்கள்..!!

By Dinesh TG  |  First Published Jan 27, 2023, 11:07 AM IST

சாப்பிட்ட உடனேயே படுக்காமல் அல்லது உட்காராமல் சில அடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
 


நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீரிழிவு ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினை. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போனால், இருதய பிரச்சனைகள், விரல்கள் மற்றும் கால்விரல்களில் நரம்பு சேதம், சிறுநீரக கோளாறுகள், கண் பிரச்சினைகள், மோசமான இரத்த ஓட்டம் மற்றும் பாதங்களில் நரம்பு சேதம் போன்ற பாதிப்புகள் உருவாகும். 

நடைபயிற்சி நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. தவிர, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. அதனால் தான் தினமும் நடக்க வேண்டும் என ஒவ்வொரு நிபுணர்களும் கூறுகின்றனர். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது செரிமானத்தை மேம்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் நடப்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இது டைப் 2 நீரிழிவு போன்ற சிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது.

Latest Videos

undefined

ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வில், நடைபயிற்சி எவ்வாறு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. இதை தீர்மானிக்க துறை சார்ந்த 7 ஆய்வாளர்கள், ஆய்வுகளின் முடிவுகளை முடித்து மதிப்பாய்வு செய்தனர். உணவு உண்ட பிறகு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை லேசான நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் ஒருமனதாக தெரிவித்துள்ளனர்.

மவுனமாக இருப்பதனாலும் பலன் கிடைக்கும்- தெரியுமா உங்களுக்கு..!!

சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் நடப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைக்கிறது. இதன்மூலம் பலனடைந்த நோயாளிகளும் தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில் வழக்கமான ஏரோபிக் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு இன்சுலின் உணர்திறன் அதிகரிப்பது தான் முக்கிய காரணமாக உள்ளது.

நடைப்பயிற்சி இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், சோர்வு மற்றும் கலோரிகளையும் குறைக்கிறது. மேலும், இது உடலுக்கு வலுவை அதிகரிக்கும் சிறப்பான நடவடிக்கையும் கூட. இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும் மற்றும் எலும்புகள் வலுவடையும்.

click me!