மண மணக்கும் மலாய் சிக்கன் கிரேவி எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Jan 27, 2023, 7:15 AM IST

வாருங்கள்! சுவையான மலாய் சிக்கன் கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


சிக்கன் வைத்து செய்யும் அனைத்து ரெசிபிக்களும் சுவையாக இருக்கும். வழக்கமாக சிக்கன் வைத்து கபாப், 65, சில்லி சிக்கன், சிக்கன் சூப் என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் மலாய் ஸ்டைலில் சிக்கன் கிரேவி செய்ய உள்ளோம். இதனை சாதம், சப்பாத்தி போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

வாருங்கள்! சுவையான மலாய் சிக்கன் கிரேவி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
 

  • கோழி-1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
  • வெள்ளை மிளகு பொடி- 1 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்
  • பட்டை-1 இன்ச்
  • ஏலக்காய்-2
  • பிரிஞ்சி இலை-1
  • பிரெஷ் கிரீம்- 2 ஸ்பூன்
  • தயிர்-1/4 கப்
  • கசகசா-1 ஸ்பூன்
  • முந்திரி- 10
  • பாதாம்-10
  • தேங்காய்- 1/4 கப்
  • நெய்- தேவையான அளவு
  • உப்பு-தேவையான அளவு

 

Latest Videos

பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு பன்னீர் வைத்து ஹெல்த்தி கட்லெட் செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசி பின் ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிக்கனுடன் காய்ந்த மிளகாய், பட்டை, பிரிஞ்சி இலைகள், ஏலக்காய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.பின் குக்கரில் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து 3 விசில்கள் வேக விட வேண்டும்.3 விசில் முடிந்த பிறகு, குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து சிக்கனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், கசகசா,முந்திரி மற்றும் பாதாம் முதலியவற்றை சேர்த்து சிறிது நீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சி ஜாரில் வெங்காயம் சேர்த்து வெங்காய பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து, நெய் உருகிய பின் அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதில் வெள்ளை மிளகு தூள் தூவி பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள சிக்கனை ஸ்டாக்குடன் சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் ,கரம் மசாலா மற்றும் கெட்டி தயிர் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். கிரேவி கொதித்து கெட்டியாக வந்த பிறகு அதில் ப்ரஷ் கிரீம் சேர்த்து கிரேவி கிரேவியை கிளறி விட வேன்டும். அவ்ளோ தான்! ருசியான மலாய் சிக்கன் கிரேவி ரெடி!

click me!