Hemoglobin: ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் அற்புத பானத்தை தயாரிப்பது எப்படி?

By Dinesh TGFirst Published Jan 25, 2023, 11:52 PM IST
Highlights

உடலில் ஹீமோகுளோபினின் அளவு குறைவதால் அடிக்கடி காய்ச்சல், தேவையற்ற தொற்றுக்கள், தலைவலி, மயக்கம் மற்றும் அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அவ்வகையில் நம் உடலில் ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கும் அற்புதப் பானத்தை, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து காண்போம்.

உடலில் உள்ள உறுப்புகள் நன்றாக செயல்பட இரத்தம் மிகவும் அவசியமாகும். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து விட்டால், நமக்கு பல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. காய்ச்சல் மற்றும் தொற்றுப் பிரச்சனைகள் அதிகமாக இருந்தால், நமது உடலில் உள்ள ஹீமோகுளோபினின் அளவானது குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் அளவிற்கு கடைகளில் மருந்து மாத்திரைகள் விற்கப்படுகிறது.

ஆனால், இந்த மருந்து மாத்திரைகளினால், நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் உடலில் ஹீமோகுளோபினின் அளவு குறைவதால் அடிக்கடி காய்ச்சல், தேவையற்ற தொற்றுக்கள், தலைவலி, மயக்கம் மற்றும் அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அவ்வகையில் நம் உடலில் ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கும் அற்புதப் பானத்தை, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்

கேரட் - 1 கப்
பீட்ரூட் - 1 கப்
தேங்காய் தூண்டு - 1/2கப்
மாதுளம் பழம் - 1
பேரீச்சம்பழம் - 4
தேங்காய் துண்டுகள் - சிறிதளவு
தண்ணீர் - 1 டம்பளர்

செய்முறை

முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்து, தோலை அகற்றி நன்றாக சுத்தம் செய்த பிறகு, சிறுசிறு தூண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதன்பின், ஒரு கேரட்டை எடுத்து நன்றாக சுத்தம் செய்து, இதனையும் சிறுசிறு தூண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை ஏன் சேர்க்கிறோம் என்றால், இதில் புதிய இரத்த உற்பத்தியை அதிகரிக்கின்ற ஆற்றல் அதிகளவில் உள்ளது. 

Daytime sleepiness: பகலில் குட்டித் தூக்கம் போடுவது நல்லதா? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

மாதுளம் பழத்தையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இதில் அதிகமான இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. ஆகையால் இந்த பழத்தை எடுத்து சுத்தம் செய்து விட்டு, அதன் உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்து, தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன பீட்ரூட், கேரட்,  பேரீச்சம்பழம், மாதுளம் பழ விதைகள் மற்றும் தேங்காய் துண்டுகள் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்தக் கலவையில் ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும் அற்புத பானம் தயார். இந்த பானத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கலாம்.   

click me!