வாருங்கள்! சத்தான பச்சைப்பயறு மசியல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் சாதத்திற்கு சாம்பார், ரசம், குழம்பு என்று சாப்பிட்டு அலுத்து விட்டதா? இதனை தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமாக செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த பதிவு உங்களுக்கு துணை புரியும்.இன்று நாம் பச்சைப் பயறு என்றழைக்கப்படும் பாசிப் பயறு வைத்து கடையல் அல்லது மசியல் செய்வதை காண உள்ளோம். இதனை சூடான சாதம், சப்பாத்தி, புல்கா போன்றவற்றிற்கு வைத்து சாப்பிடலாம். இதனை வளரும் குழந்தைகளுக்கு சிறிது நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பாசிப்பயிறில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகையை தடுக்க துணை புரிகிறது.மேலும் கொலஸ்டராலின் அளவை குறைக்க உதவுகிறது. இதனை தவிர இதில் அதிகளவு நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளதால் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
வாருங்கள்! சத்தான பச்சைப்பயறு மசியல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தாளிப்பதற்கு:
undefined
மண மணக்கும் மலாய் சிக்கன் கிரேவி எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டை இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.1 குக்கரில் பச்சைப்பயறு எடுத்துக் கொண்டு அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதில் இப்போது இடித்த பூண்டு, பொடியாக அரிந்த தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது குக்கரில் உப்பு, மஞ்சள் தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து 4 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.4 விசில் வந்த பிறகு, அடுப்பை அனைத்து குக்கரை இறக்கி விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து பருப்பினை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான பின் கடுகு, சீரகம் , கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.தாளித்தவற்றை குக்கரில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! சத்தும் ருசியும் கொண்ட பச்சைப்பயறு மசியல் ரெடி!