ஆண்களே! இது போன்ற உணவுகளை சாப்பிடாதீங்க.. அந்த பிரச்சினை வரும்!!

Published : Feb 08, 2024, 08:26 PM ISTUpdated : Feb 08, 2024, 08:31 PM IST
ஆண்களே! இது போன்ற உணவுகளை சாப்பிடாதீங்க.. அந்த பிரச்சினை வரும்!!

சுருக்கம்

சில உணவுகள் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே, ஆண்கள் இந்த விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதன் மூலம் ஒரு புதிய உயிரை உருவாக்க முடியும். இது இயற்கையின் விதியும் கூட. பிறகு ஆணின் விந்தணுக்களும் பெண்ணின் கருமுட்டையும் ஒன்று சேர வேண்டும். பின்னர் அது பெண்ணின் வயிற்றில் கருவாக உருவாகி குழந்தையாக உருவெடுக்கிறது. இந்த செயல்முறை சரியாக நடைபெற, பெண்களுக்கு சரியான நேரத்தில் கருமுட்டை வெளிப்பட வேண்டும் மற்றும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுவின் தரமும் அதன் எண்ணிக்கையும் குறைந்து வருவதால், ஆண்களிடையே மலட்டுத்தன்மை பிரச்சனை அதிகமாக உள்ளது. இன்று ஆண்களின் விந்தணுக்களின் கருவுறுதலைக் குறைக்கும் உணவுகள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

மது அருந்துதல் : 
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் இரண்டும் உடல் நலத்திற்கு கேடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பாதிப்படைவது மட்டுமின்றி பலவிதங்களில் உடல்நலக் கோளாறுகள் தோன்றும். இப்போதும் பல இளைஞர்கள் இளம் வயதிலேயே அடிமையாகி விடுகிறார்கள். இதனால், அவர்களின் உடல் நலம் மட்டுமின்றி, குடும்ப அமைதியும் கெடுகிறது. குறிப்பாக திருமண வயதில் அதிகமாக குடிப்பவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு விரைவில் குறைவதுடன் விந்தணு எண்ணிக்கையும் குறைகிறது. இறுதியில், இதன் காரணமாக, எதிர்காலத்தில் குழந்தை இல்லாத பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் :
நம்மைக் கவரும் பல வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெட்டுப்போகாமல் இருப்பதுடன், அவை நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதாலும், உணவுப் பதப்படுத்த சில ரசாயனக் கூறுகள் சிறிதளவு கலக்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் இதற்கு விதிவிலக்கல்ல..! குறிப்பாக, இத்தகைய உணவுப் பொருட்களில் அதிக அளவு உப்பு மற்றும் கொழுப்புச் சத்து இருப்பதால், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவதோடு, இதயம் தொடர்பான பிரச்னைகளும் மிக விரைவில் தோன்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆண்கள் முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.

பப்பாளி விதைகள் :
ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் பப்பாளி பழமும் ஒன்று. இயற்கையான இனிப்புச் சத்து கொண்ட இந்தப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஆண்கள் பப்பாளி விதைகளை மட்டும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதுவும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறதாம்..!!

இதையும் படிங்க:  இந்த உணவுகள் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுமாம்.. விஞ்ஞானிகள் புதிய தகவல்..

பூண்டு :
ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் ஒரு சிறிய கிராம்பு பச்சை பூண்டை மென்று சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ஆண்கள் மட்டுமே இந்த விஷயத்தில் பின்வாங்க வேண்டும்.!! ஏனெனில் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக சுரக்க வாய்ப்பு அதிகம், இதனால் விந்தணு எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:  ஜிம் செல்லும் ஆண்களில் 7 பேரில் ஒருவருக்கு ஆண்மைக்குறைவு அபாயம்! ஆய்வில் ஷாக்கிங் முடிவுகள்!

இவற்றை சாப்பிடுங்கள் :

  • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். ஏனெனில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நமது செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டைத் தூண்டுகிறது.
  • வைட்டமின் ஈ அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • துத்தநாகம் அதிகம் உள்ள பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள், அளவோடு பழகுவது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!