'அதலைக்காய்' சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை சிறந்த மருந்து.. அடிக்கடி சாப்பிடுங்க!!

Published : Feb 08, 2024, 06:24 PM ISTUpdated : Feb 08, 2024, 06:28 PM IST
'அதலைக்காய்' சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை சிறந்த மருந்து.. அடிக்கடி சாப்பிடுங்க!!

சுருக்கம்

'அதலைக்காய்' என்னும் காய் இயற்கை நமக்கு அள்ளித்தந்த வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில், அது பலவிதமான மருத்துவ நன்மைகளால் நிறைந்துள்ளது.. இப்போது இதன் பயன்கள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.

இன்றைய நாகரீக உணவுகளை சாப்பிடுவதால், நம்மை பல்வேறு நோய்கள் தாக்குகிறது. இதனால் பலருக்கு இளம் வயதிலேயே சர்க்கரை நோய், மாரடைப்பு ஏற்படுகிறது. ச்உணவே மருந்து' என்ற பழமொழிக்கேற்றப்படி, நம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். 'அதலைக்காய்' என்னும் காய் இயற்கை நமக்கு அள்ளித்தந்த வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில், அது பலவிதமான மருத்துவ நன்மைகளால் நிறைந்துள்ளது.. இப்போது இதன் பயன்கள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.

அதலக்காய்:
அதலக்காய் என்பது ஒரு கொடிவகை தாவரம் ஆகும்.  இது பாகற்காய் போன்று கசப்புத் தன்மையுடையது. உலகத்தில் எந்த நாட்டிலும் விளையாத ஒரு காய் இது. ஆனால், இந்தியாவில், இது மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அதிகமாக கிடைக்கும். 

அதலக்காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. இது  மூலிகை செடி கொடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக, இந்த காயின் விதையை நாம் எடுத்து வைத்தாலும் இந்த செடி வளராது. ஏனெனில், இது மழைக்காலங்களில் தானாக வளரக் கூடிய ஒரு செடியாகும். மேலும் இது மழைக்காலங்களில் மட்டும் தான் அதிகமாக கிடைக்கக் கூடிய ஒரு காயாகும். பாகற்காயைப் எப்படி நீங்கள் பொரியல் மற்றும் குழம்பு வைத்து சாப்பிடுகிறீர்களோ, அப்படி இந்த அதலைக்காயை செய்து சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க:  Pasalai Keerai : இந்த குளிர்காலத்தில் உடல் எடை குறைய "பசலைக் கீரை" அவசியம்! ஏன் தெரியுமா?

மருத்துவ பயன்கள்:
நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு வரபிரசாதம் ஆகும். ஏனெனில், இதில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும், சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மஞ்சள் காமாலை: அதலைக்காய் மஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

இதையும் படிங்க:  உடல் எடையை குறைப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை.. கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சர்ய நன்மைகள்..

குடற்புழு: அதலைக்காயில் உள்ள சத்துக்கள் வயிற்று பிரச்சனையை தீர்க்க முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இது வயிற்றில் இருக்கும் கிருமிகளை அளிப்பதோடு மட்டுமின்றி, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

எடை குறைப்பு: இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை பசியை கட்டுப்படுத்தும். மேலும் இதில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால், எடையை குறைக்க நினைப்பார்கள் இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கெள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சிறுநீரக கற்கள்: இதில் உள்ள பைடோநியூட்ரின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. இதனால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, அவற்றில் இருக்கும் சத்துக்கள்  சிறுநீரகத்தில் உள்ள கற்களை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கும். எனவே, இந்த காயை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புற்றுநோய் செல்கள்: இந்த காயில்ன் லெய்ச்சின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அவை, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மேலும் இவற்றில் இருக்கும் சத்துக்கள் புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக கணைய புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க