கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் 2 பேர் உயிரிழப்பு.. 49 பேருக்கு பாதிப்பு உறுதி.. அரசு எச்சரிக்கை..

By Ramya s  |  First Published Feb 5, 2024, 3:08 PM IST

குரங்கு காய்ச்சல் காரணமாக கர்நாடகாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், 49 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.


கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக குரங்க காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் குரங்கு காய்ச்சல் காரணமாக அம்மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷிவமொக்கா மாவட்டத்தின் ஹோசநகர் தாலுகாவில் ஜனவரி 8ஆம் தேதி ‘குரங்கு காய்ச்சல்’ காய்ச்சல் காரணமாக 18 வயது சிறுமி உயிரிழந்தார்.  அதே போல் உடுப்பி மாவட்டம், மணிப்பாலில் சிக்கமகளூருவில் உள்ள சிருங்கேரி தாலுகாவைச் சேர்ந்த 79 வயது முதியவர் உயிரிழந்தார்.

குரங்கு காய்ச்சல் : கர்நாடக அரசு எச்சரிக்கை

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் குரங்கு காய்ச்சல் காரணமாக 2 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் அங்கு வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க தற்போதைய நெறிமுறைகளை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஆபத்தானது? அதன் அறிகுறிகள் என்ன? பெண்களே கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..

கர்நாடகாவில் மொத்தம் 49 பேருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (34 வழக்குகள்) உத்தர கன்னட மாவட்டத்தில் அதிகபட்சமாக 34 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து ஷிவமொக்காவில் 12 பேருக்கும், சிக்கமகளூரு மாவட்டத்தில் 3 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

கர்நாடகாவில் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் காரணமாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் டி ரன்தீப், ஷிவமொக்காவிற்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தினார். நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் பரவலைத் தடுக்க பாதிக்கப்பட்ட மாவட்டங்களுடன் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது, குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லை என்றும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மூலம் இந்த சிக்கலை தீர்க்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, குறிப்பாக வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் வீடு வீடாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

குரங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?

குரங்குகளில் உயிர்வாழும் உண்ணிகள் கடிப்பதால் குரங்கு காய்ச்சல் பரவுகிறது. குரங்குகளில் உயிர்வாழும். இந்த உண்ணி மனிதர்களைக் கடிக்கும்போது, அது தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. உண்ணி கடித்த கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமும் மனிதர்களுக்கு இந்நோய் வரலாம். இருப்பினும், பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு வரைஸ் பரவாது என்பதால் இது அதிகமானோருக்கு பரவ வாய்ப்பில்லை.

இளம் வயதிலேயே மாதவிடாய் வந்தால் சர்க்கரை நோய் வருமா..? ஷாக் ரிப்போர்ட்!

குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

குளிர் காய்ச்சல்
உடல் வெப்பநிலையில் திடீர் உயர்வு
தலைவலி
தசை வலி
முதுகுவலி
இருமல்
குமட்டல் மற்றும் வாந்தி

குரங்கு காய்ச்சல் சிகிச்சை

தற்போது, குரங்கு காய்ச்சலுக்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை, இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

click me!