100 ஆண்டுகள் பழமையான ஒயினை திறக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு நல்ல தரமான ஒயினின் அடிப்படை விதி அது எத்தனை ஆண்டுகள் பழனமையானது என்பது தான்.. ஒயின் எவ்வளவு பழமையாக இருக்கிறதோ, அவ்வளவு சுவையாக இருக்கும் என்று மதுபான பிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பழமையான ஒயின் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது 100 ஆண்டுகள் பழமையான ஒயினை திறக்கும் வீடியோ தான்.
'indianfoodierocks' என்ற என்ற கண்டன் கிரியேட்டர், ஒரு நூற்றாண்டாகப் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒயின் பீப்பாயைத் திறக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து செய்துள்ளார். அந்த வீடியோவில் கூர்மையான கத்தி போன்ற கருவி மூலம் பீப்பாய் அட்டையை அகற்றுவதை பார்க்க முடிகிறது. அந்த பீப்பாய் இலைகளால் மூடப்பட்டுள்ளதையும் அதை திறப்பதையும் அதில் பார்க்க முடிகிறது. இறுதியாக அந்த ஒயின் பரிமாறப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை, வீடியோ 10.6 மில்லியன் பார்வைகளையும், 432k விருப்பங்களையும், ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து ஆச்சர்யமடைந்த நெட்டிசன்கள் பலரும் இதுதொடர்பாக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பயனர் ஒருவர் "அது 100 வயது என்று அவருக்கு எப்படித் தெரியும்?" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், "அந்த ஒயினின் ஒரு சிப்பை அருந்தினால், அந்த மதுவை யார் தயாரித்தார்கள் என்பதை நீங்கள் சந்திப்பீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "அந்த விஷயங்கள் பைபிளின் காலத்திலிருந்து வந்தவை போல் தெரிகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகின் அரிதான பாஸ்போர்ட்.. 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும்.. பவர்ஃபுல் பாஸ்போர்ட் பற்றி தெரியுமா?
ஒரு நபர் எழுதினார், " இந்த ஒயினின் ஒரு சிப் சொர்க்கம் போல உணரவைக்கும். மற்றொரு சிப் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது." என்று அவர் பதிவிட்டுள்ளார். எனினும் இது 100 ஆண்டுகள் பழமையான வைன் இல்லை என்றும் சில கருத்து தெரிவித்து வருகின்றனர். “ இந்த வீடியோ குறித்து நான் ஆய்வு செய்தேன். இது 2010-ம் ஆண்டு சீன ஒயின். இது 100 ஆண்டுகள் பழமையானது இல்லை.” என்று பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.