ஹோட்டல் சுவையில் இறால் தொக்கு ரெசிபி எப்படி எளிதாக வீட்டில் செய்வது என்பதை பார்க்கலாம்..
'இறால்' கடல் உணவுகளில் ஒன்று. இதில் நம் உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இறால் ஒரு சிறந்த கடல் உணவுகளில் ஒன்றாகும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் இல்லை. எனவே, இறாலை வைத்து ஹோட்டல் சுவையில் தொக்கு வீட்டிலேயே எப்படி சமைப்பது என்பதை பார்க்கலாம்!!
தேவையான பொருட்கள்:
இறால் - 1/4 கிலோ
கீறிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
கடுகு - 1/4 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாதூள் -1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
undefined
இதையும் படிங்க: கமகமக்கும் வாசனையில் 'பக்கோடா குழம்பு' ..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ!!
செய்முறை:
இதனை செய்ய முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும் அதில் கடுகு போட வேண்டும். கடுகு நன்கு பொறிந்ததும், நறுக்கிய பூண்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பூண்டின் பச்சை வாசனை போனதும், இப்போது அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தக்காளியைச் சேர்த்து, மிருதுவாகும் வரை வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போய் எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். தேவைப்படால் சிறிது தண்ணீர் அதில் சேர்க்கலாம். இப்போது இதில் இறால் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். இறால் வெந்ததும், அதில் கரம் மசாலாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறிவிட்ட பிறகு இறக்கிவிடலாம். அவ்வளவு தான் இப்போது சூடான சாதத்துடன் இறால் தொக்கை பறிமாறினால் அருமையாக இருக்கும்!!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D