அட்டகாசமான சுவையில் 'ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா'... இனி நீங்களும் சுலபமாக வீட்டில் செய்யலாம்..

Published : Jan 30, 2024, 03:11 PM ISTUpdated : Jan 30, 2024, 03:21 PM IST
அட்டகாசமான சுவையில் 'ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா'... இனி நீங்களும் சுலபமாக வீட்டில் செய்யலாம்..

சுருக்கம்

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

'பன்னீர் பட்டர் மசாலா' மிகவும் சுவையான உணவு வகைகளில் ஒன்று. இது இந்தியா முழுவதும் மிகவும்  பிரபலமான உணவு ஆகும். பன்னீர் பட்டர் மசாலாவை சப்பாத்தி, பரோட்டா, நான், புலாவ், பிரியாணி, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

நீங்கள் உங்கள் வீட்டில் எப்போதும் சப்பாதிக்கு குருமா, கிரேவி வைத்து  சாப்பிடுவது போரடித்தால் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் பட்டர் மசாலா ரெசிபி செய்து சாப்பிடுங்கள். வீட்டில் செய்த பன்னீர் பட்டர் மசாலாவானது கடையில் வாங்கியதை விட சாப்பிடுவதெற்கு மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இப்போது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 1
இலவங்கம் - 3
ஏலக்காய் - 3
முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி துண்டு - 1
பூண்டு - 6
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
பிரஷ் க்ரீம் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் 

இதையும் படிங்க: இன்று நீங்கள் ஏதாவது ஸ்பெஷல் சாப்பிட விரும்பினால் "உருளைக்கிழங்கு பனீர்" மசாலாவை ட்ரை பண்ணுங்க.!!

செய்முறை:

  • இதனை செய்ய முதலில், ஒரு கடாயில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின் சிறிது நேரம் கழித்து அதனுடன் பட்டை, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
  • மேலும் சிறிது நேரம் கழித்து இவற்றில் முந்திரிப்பருப்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
  • பிறகு 500 மி.லி தண்ணீரைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். தக்காளி கூழாக வந்தவுடன் அவற்றை இறக்கி ஆறவைக்க வேண்டும்.
  • ஆறிய பின்னர் அதனைப்ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:  உங்கள் குழந்தையின் மதிய உணவின் சுவையை அதிகரிக்க சூப்பரான "பனீர் பிரைடு ரைஸ்" ரெசிபி!

  • பிறகு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்க்க வேண்டும். வெண்ணெய் நன்கு உருகியதும், அதில் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இதனை நீங்கள் குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வேக வைக்க வேண்டும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள கலவையை இதில் சேர்க்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் 1 கப் தண்ணீர் மற்றும் சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதனை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்க வேண்டும்.
  • சிறிது நேரம் கழித்து அதில் சர்க்கரை மற்றும் பிரஷ் க்ரீம் சேர்க்க வேண்டும்.
  • இப்போது பன்னீர் துண்டுகளை அதில் சேர்த்து குறைந்த தீயில் சுமார் 5 நிமிடங்கள் அப்படியே வேக வைக்க வேண்டும்.
  • கடைசியாக சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை  சேர்க்க வேண்டும்.
  • அவ்வளவு தான் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி...!!

கண்டிப்பாக இந்த ரெசிபியை நீங்கள் ட்ரை பண்ணுங்கள். உங்கள் பதில்களை எங்களுக்கு அனுப்ப மறக்காதீர்கள்...

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Summer Food Tips: கோடையில் உணவு வீணாகாமல் இருக்க 10 சூப்பர் டிப்ஸ்!
Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!