திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இந்த 3  ஃபார்முலாவை முதலில் தெரிஞ்சுக்கோங்க!!

By Kalai Selvi  |  First Published Feb 7, 2024, 10:00 PM IST

நீங்களும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றால், உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்பினால், இந்த 3  ஃபார்முலாக்களை பற்றி முதலில்  தெரிந்து கொள்வது அவசியம். 


திருமணமாகி சில வருடங்கள் கழித்து பிரியும் தம்பதிகளை பார்க்கும் போது கல்யாணம் பண்ணுவது சரியான  முடிவா இல்லையா என்ற கேள்வி அடிக்கடி உங்கள் மனதில் அடிக்கடி எழுகிறதா..?  பொதுவாகவே, திருமணங்களில் காதல், நம்பிக்கை, புரிதல்கள் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம்,  காதல் திருமணம் செய்பவர்களுக்குள் இவை ஏதும் இல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அதே சமயம், முதுமையிலும் ஒருவரையொருவர் உறுதுணையாகக் கொண்டு, வற்புறுத்தாமல், அன்பினால் துணையாக நிற்கும் தம்பதிகளை பார்க்கும் போது அவர்களிடம் கண்டிப்பாக அதற்கான ரகசியத்தைக் கேட்கத் தோன்றும்.

எனவே, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ, நீங்கள் அதற்கென்று எதுவும் செய்ய வேண்டியதில்லை மற்றும் புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியமுமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க இந்த 3 விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நம்புங்கள், இந்த விஷயங்கள் உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். இது தவிர, இது தொடர்பாக வீட்டில் உள்ள பெரியவர்களிடமும் நீங்கள் சில ஆலோசனைகளை பெற தயங்காதீர்கள். இப்போது இத்தொகுப்பில், அந்த 3 விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

அர்ப்பணிப்பு:
உறவுகளில் விரிசல் மற்றும் பிரிவினை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அர்ப்பணிப்பு இல்லாமல் இருப்பது. நீங்கள் ஒருவரை திருமணம் செய்து, வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பீர்கள் என்று உறுதியளித்திருந்தால், அதை கண்டிப்பாகக் காப்பாற்றுங்கள். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உங்கள் துணைக்கு கொஞ்சம் நேரம் கொடுப்பதன் மூலம் அவர்கள் மீது உங்கள் அர்ப்பணிப்பைக் காட்டலாம். 

இதையும் படிங்க:  இந்த குணங்கள் கொண்ட ஆண்களை பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்..

தொடர்பு:
முதலில், தம்பதிகளிடையே வரும் சண்டை என்பது மிகவும் பொதுவான விஷயம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த சண்டைகள் அளவுக்கு அதிகமாக அதிகரிக்க அனுமதிக்காதீர்கள். முக்கியமாக, சண்டையால் சில தம்பதிகள் பல மாதங்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பார்கள். ஆனால் இது எந்த உறவுக்கும் நல்லதல்ல. நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்பினால், தொடர்பு மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் துணை செய்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை உங்கள் மனதில் வைக்காதீர்கள், மாறாக அவரிடம் சொல்லுங்கள். இதனால் உங்கள் பிரச்சினைகள் சுலபமாக முடியும்.

இதையும் படிங்க:  காதல் திருமணம் செய்ய போறீங்களா..? திருமணத்திற்குப் பிறகு இதை செய்யாவிட்டால் விரிசல் கன்பார்ம்!

சமரசம் செய்யுங்கள்:
சில ஆண்கள், திருமணத்திற்குப் பிறகு எல்லாவற்றிலும் பெண்கள் மட்டும் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. எனவே, ஆண்களே! இந்தக் கேள்வியை நீங்கள் சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்தால், உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பாதிக்கு மேற்பட்ட பிரச்சனை இங்கே தீர்க்கப்படும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொழில், குடும்பம், சந்தோஷம், சுதந்திரம் என எல்லாவற்றிலும் பெண்கள் மட்டுமே சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அந்த உறவு சரியாக இயங்காது. தேவைப்படும் இடங்களில் நீங்கள் சில தியாகங்களைச் செய்ய தயாராக இருங்கள். முக்கியமாக, திருமணத்துக்குப் பிறகு வரும் பொறுப்புகளை இருவரும் பிரித்துக் கொள்ளுங்கள். இதைச் செய்வதன் மூலம், உங்கள் துணையின் மனதில் உங்களைப் பற்றி நல்ல எண்ணங்கள் இருக்கும். இதனால் உங்கள் மீது அவர்களுக்கு அன்பு அதிகரிக்கும். மேலும் அவர் உங்களுடான உறவை நன்கு பராமரிக்க முயற்சி செய்வார்.

click me!