உடல் சூட்டில் இருந்து வாத பிரச்சனை வரை ஒரே தீர்வு "ஆமணக்கு எண்ணெய்"...'இதுக்கு' கூடவா இந்த எண்ணெய் யூஸ் ஆகுது!

By Kalai Selvi  |  First Published Aug 30, 2023, 6:36 PM IST

இத்தொகுப்பில் நாம் ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணையின் மருத்துவ பயன்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.


உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி போக்க ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவினால் சிறிது நேரத்தில் வயிற்று வலி மறைந்து விடும். விரைவில் உடல் குளிர்ச்சி அடையும். இவ்வாறு ஆமணக்கு எண்ணெய் பல விதங்களில் பயன்படுகிறது. அதன் பலன்கள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் பயன்கள்:
ஆமணக்கு விதையில் இருந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. அதன் பயன்கள் இங்கே..

வலி நிவாரணத்திற்கு:
ஆமணக்கு எண்ணெய் வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க:  வியக்கவைக்கும் அளவுக்கு நன்மைகளை வாரி வழங்கும் விளக்கெண்ணெய்..!!

தோல் சிராய்ப்புக்கு:
உடம்பில் ஏற்படும் மேல்தோல் உரசி உண்டாகும் சிராய்ப்புக்கு ஆமணக்கு எண்ணெயை தடவினால் போதும். எரிச்சல் நீங்கி விரைவில் பலன் கிடைக்கும்.

உடல் சூடு தணிப்பதற்கு: 
உடலில் பித்தம் அதிகரித்தால் உடம்பு சூடாகும். எனவே, உடபில் உள்ள  சூட்டைத் தணிக்க இரவில் உள்ளங்காலில் ஆமணக்கெண்ணெயை கொஞ்சம் தடவிட்டு தூங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலின் சூடு விரைவில் தணியும்.

ஆமணக்கு இலையின் மருத்துவ குணம்:

முழங்கால் வலி மற்றும் வீக்கம்: 
உங்களுக்கு முழங்கால் வலி மற்றும் வீக்கம் இருந்தால் ஆமணக்கு இலைகளை சிறித்காக நறுக்கி அதை விளக்கெண்ணெய் விட்டு வதக்க வேண்டும். பின் அவற்றை சூட்டுடன் வலியுள்ள இடத்தில் ஒத்தடமிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முழங்கால் வலி மற்றும் வீக்கம் குறையும்.

மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் வலி:

மலச்சிக்கல் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிறு வலி, நீங்க அடிவயிற்றில் விளக்கெண்ணயை தடவ வேண்டும். பின் வயிற்றின் மேல் வதக்கிய ஆமணக்கு இலைகளை வைத்து கட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிங்க:  Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

பால் சுரக்க: 
குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்க ஆமணக்கு இலையை தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பின் மிதமான சூட்டில் வைத்து மார்பில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அதுபோல் ஆமணக்கு இலைய வதக்கி மார்பில் கட்டிவந்தால் விரைவில் 
பால் சுரக்கும்.

கட்டிகள் உடைய: 
உடம்பில் கட்டிகள் இருந்தால் அவை பழுத்து உடைய வேண்டுமென்றால், ஆமணக்கு விதையின் ஓட்டை நீக்கி, பருப்பை பச்சையாக அரைத்து அல்லது நசுக்கி வதக்க வேண்டும். பின்  அவற்றை கட்டிகள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

வாதம் பித்தம் கபம் நீங்க: 
வாதம் பித்தம் கபம் நீங்க, விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பசு நெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தேய்து ஊற வைத்து பின் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வாதம் பித்தம் கபம் ஆகிய 3 பிரச்சனைகளும் விரைவில் நீங்கும்.

click me!