18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும்..!!

By Dinesh TG  |  First Published Nov 15, 2022, 12:37 PM IST

உடலில் மாற்றம் ஏற்படும் போது, அதை தக்கமுறையில் கவனித்து சுய பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அல்லது சிறுவர்கள் தங்களை அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துக்கொள்ள பழகுங்கள். இதன்மூலம் எந்த பாதிப்பும் நமக்கு முன்கூட்டியே தெரியவரும். அதற்கு உரிய சிகிச்சையை பெற முடியும்.
 


ஆரோக்கியத்துடன் இருப்பது என்பது மனிதனுக்கு எழுதப்பட்ட விதி. ஒருவேளை உடல்நலனில் ஏதேனும் பிரச்னை எழுந்தால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாது. எனவே எப்போதும் உடல் ஆரோக்கியத்துக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட வேண்டும். ஆண்களை விட, பெண்கள் தங்களுடைய உடல்நலனில் அதிக அக்கறை காட்டுக்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் புதிய நோய்கள் அவர்களைத் துன்புறுத்தி வருவதாக பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் அவ்வப்போது ஆண்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தொடர்ந்து பரிசோதிக்காத பழக்கம் சிறிய உடல்நலப் பிரச்சினைகளையும் கடுமையான நோய்களையும் உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. அடிக்கடி தாகம், அரிப்பு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் பொதுவானவை என்றாலும், அவை தீவிர நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால்தான் நோய்கள் வராமல் இருக்க சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யுங்கள். அதனால் 18 வயதை கடந்த ஆண்கள் ஒவ்வொருவரும் கீழே வழங்கப்பட்டுள்ள மருத்துவச் சிகிச்சைகளை அவ்வப்போது செய்துகொள்வது, உடல்நலனுக்கு பாதுகாப்பாக அமையும்.

இரத்த சர்க்கரை அளவு சோதனை

Latest Videos

undefined

அடிக்கடி தாகம், அரிப்பு, அதிக சிறுநீர் கழித்தல், கை கால்களில் கூச்சம் போன்றவை நீரிழிவு நோய்களில் பொதுவான அறிகுறிகளாகும். ஏராளமான இந்திய ஆண்கள் டைப் 1 நீரிழிவு நோயால் இளம் வயதிலேயே பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இது பற்றி தெரியாது. அதனால்தான் ஆண்கள் தங்கள் இரத்த சர்க்கரையை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான ஆண்கள் 18 வயது முதல் 40 வயது வரை - இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரத்தச் சக்கரை அளவு பரிசோதனை செய்யலாம். ஆரோக்கியமான ஆண்கள் 40 வயது முதல் 65+ வயது வரையிலானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை இரத்தச் சக்கரை அளவை பரிசோதித்து பார்க்கலாம்.

இரத்த அழுத்த பரிசோதனை

பெண்களை விடவும் ஆண்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம். இந்த பாதிப்பு ஏற்பட்டால், பக்கவாதமும் எளிதாக ஏற்படும் அபாயம் உருவாகிறது. இப்போதெல்லாம் இளம் வயதிலேயே இருக்கும் ஆண்களுக்கு கூட உயர் ரத்த அழுத்தம் ஆபத்து ஏற்பட்டு, இறக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. 18 முதல் 40 வயதுடைய ஆரோக்கியமான ஆண்கள் - இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது முக்கியம். அதேபோன்று 40 வயது முதல் 65 வயதுக்கு மேல் உள்ள ஆரோக்கியமான ஆண்கள் - வருடத்திற்கு இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

பாலியல் நோய்க்கான பரிசோதனை

பாலியல் நோய் பாதிப்புகளில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை ஆகும். இது உடலுறவு ஏற்படாமல் கூட ஒரு நபரை பாதிக்கக்கூடும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனால் இந்த பாதிப்புகளை பாலியல் தொடர்பான செயல்பாடுகளுடன் மட்டும் பொறுத்திப் பார்க்க வேண்டாம். எனவே உடலுறவில் ஈடுபட்டாலும் இல்லாவிட்டாலும், பாலியல் நோய்த்தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 18 வயது முதல் 40 வயது வரையிலான ஆரோக்கியமான ஆண்கள் - வருடத்திற்கு 1 முறை, ஆரோக்கியமான ஆண்கள் 40 வயது முதல் 65+ வயது வரை - வருடத்திற்கு 1 முறை என பாலியல் நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சருமத்தில் அரிப்பு தோன்றினால் லேசாக எடுத்துவிட வேண்டும்- புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம்..!!

விதைப்பை புற்றுநோய்

உலகளவில் ஏற்படும் ஆண்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று புரோஸ்டேட் கேன்சர் எனப்படுகிற விதைப்பை புற்றுநோய். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்றாலே போதும், பெரும் பாதிப்பு ஏற்படுவதை தடுத்து உயிரை காப்பாற்றிவிடலாம். prostate-specific ஆண்டிஜென் என்கிற ரத்தப் பரிசோதனை மூலம் இப்புற்றுநோய் பாதிப்பை கண்டறியலாம். ஆரோக்கியமான ஆண்கள் 18 வயது முதல் 40 வயது வரை - நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஆண்கள் 40 வயது முதல் 65+ வயது வரையில் உள்ளவர்கள், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இதற்கான பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

விரைச்சிரைப் புற்றுநோய்

விரைப் புற்றுநோய் (Testicular cancer) அல்லது விந்தகப் புற்றுநோய் என்பது ஆண் இனப்பெருக்க விந்தகத்தைப் பாதிக்கக்கூடிய ஒருவகை புற்று நோய் ஆகும். இந்த புற்றுநோயின் ஆபத்து 20 முதல் 39 வயதுடைய ஆண்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. விரைச்சிரைப் புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியது ஆகும்.[5]அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை உள்ளிட்டவை நல்ல பலனை தரும். மரபுவழியாக புற்றுநோய் உள்ள குடும்பங்களில் உள்ள ஆண்கள் மாதந்தோறும் விந்தகப் பரிசோதனை செய்வது கட்டாயம் என அமெரிக்க சிறுநீரகவியல் சங்கம் கூறியுள்ளது. 18 முதல் 40 வயதுடைய ஆரோக்கியமான ஆண்கள் - ஒரு மாதத்திற்கு 1 முறை, ஆரோக்கியமான ஆண்கள் 40 வயது முதல் 65 வயதுக்கு மேல் - ஒரு மாதத்திற்கு 1 முறை பரிசோதனை செய்துகொள்வது நன்மையை தரும்.

click me!