உலக இட்லி தினம் இன்று... பஞ்சு போல சாஃப்ட் இட்லிக்கு இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க..!

By Ma Riya  |  First Published Mar 30, 2023, 11:29 AM IST

உலக இட்லி தினமான இன்று மலரும் இட்லி நினைவுகளையும், இட்லி குறித்த தங்கள் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இத்தினத்தை கொண்டாடி வருகின்றனர். 


World Idli Day 2023: இட்லியை போல சிறந்த டிபன் வேறுகிடையாது. சமைக்கும்போதும் சரி சாப்பிட்ட பிறகும் சரி அதிக தொந்தரவு தராத ஒரே உணவு. இட்லியை சட்னி- சாம்பார்- காம்போவில் சைவமாக சாப்பிட்டாலும் ருசிக்கும். இட்லி - கறிக்குழம்பு  என அசைவமாக சாப்பிட்டாலும் சுவைக்கும். சீனியுடன், இட்லி பொடியுடன் என எந்த சைட் டிஷ் இருந்தாலும் சாப்பிட்டுவிடலாம். அதனால் தான் சில உளவியலாளர்கள் கூட இட்லியை போல இருங்கள் என்பார்கள். இந்த வரிசையில் 'எமோஷனல் இண்டலிஜன்ஸ்' என்ற மையக்கருத்தில் சோம.வள்ளியப்பன்  'இட்லியாக இருங்கள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இட்லியாக இருந்தால் சாதிக்கவும் செய்யலாம். அடடே!! 

ரவா இட்லி, பொடி இட்லி, தட்டு இட்லி, சாம்பார் இட்லி, மதுரை இட்லி, குஷ்பூ இட்லி, மல்லிபூ இட்லி என இட்லி எடுக்காத அவதாரங்களே இல்லை. பூவில் தொடங்கி நடிகை வரையிலும் இட்லிக்கு இல்லாத வெரைட்டியே இல்லை. இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம். இன்று உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் இட்லியை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

Tap to resize

Latest Videos

தென்னிந்திய பாரம்பரிய சிற்றுண்டியாக சமையலறையில் பிறந்த இட்லி, தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. ஸ்பெயின் போன்ற தொலைதூர ஐரோப்பிய நாடுகளிலும் இட்லி கிடைக்கிறது. இந்தியர்கள் எங்கு சென்றாலும் இட்லியை தேடுவார்கள். இப்படிதான் கடல் கடந்து இட்லி பரவியதோ என்னமோ!

இட்லியின் நன்மைகள் 

இட்லி ஆரோக்கியமான உணவு. காலையில் இதை உண்பதால் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். ஒருவர் காலையில் மூன்று இட்லி சாப்பிட்டால், 230 கலோரிகள், 50 கிராம் கார்போஹைட்ரேட், ஏழு கிராம் புரதம், ஐந்து கிராம் நார்ச்சத்து, முப்பது கிராம் கால்சியம் போன்றவை கிடைக்கும். ஆவியில் வேகவைத்து உண்ணும் உணவு என்பதால் எளிதில் செரிமானம் ஆகும் தன்மை உடையது. 

பஞ்சு மாதிரி இட்லிக்கு சில டிப்ஸ்..! 

மூன்றறை ஆழாக்கு இட்லி அரிசிக்கு ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வையுங்கள். ஒரு ஆழாக்கு உளுந்து போதும். அதாவது 3:1 என்ற அளவில் அரிசியும், உளுந்தும் எடுத்து கொள்ள வேண்டும். தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவிடுங்கள். சுத்தமான தண்ணீரில் ஊற வையுங்கள். அதில் தான் மாவு அரைக்க பயன்படுத்த வேண்டும். 

ஊற வைத்த உளுந்தை அரைக்க 30 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம். உளுந்து எவ்வளவு மென்மையாக அரைபடுகிறதோ அவ்வளவுக்கு இட்லி பட்டு போல சாஃப்ட்டாக வரும். அரை மணி நேரம் நன்கு தண்ணீர் விட்டு பொங்கி வர ஆட்டி கொள்ள வேண்டும். அரிசிக்கு ரொம்ப மெனக்கெட வேண்டாம். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் அரைத்தால் போதும். கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். அரிசியை உளுந்து போல நைசாக ஆட்டி விடக் கூடாது. இட்லி நன்றாக வராமல் போய்விடும். 

இதையும் படிங்க: இரும்பு தோசை கல்லை இப்படி சுத்தம் செய்து பாருங்க... ஒவ்வொரு தோசையும் மொறு மொறுவென சுடலாம்..!

அரிசியை அரைக்கும்போது முதலில் கொஞ்சம் தண்ணீர்  தாராளமாக ஊற்றி கொள்ளலாம். ஆனால் உளுந்துக்கு இப்படி முதலில் தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. பக்குவம் ரொம்ப முக்கியம். கல் உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நல்ல இட்லி நன்றாக வரும். இரண்டு மாவையும்  ஒன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் இட்லி நன்றாக வரும். இட்லி ஊற்றும் போது மாவை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதற்கு பிறகு எப்போதும் மாவை கிளறக் கூடாது.  பிரிட்ஜில் இருந்து எடுத்து 30 நிமிடம் கழித்து இட்லி ஊற்றினால் நல்ல இட்லி வரும். பிரிட்ஜில் இருந்து எடுத்ததும் ஊற்றினால் சாஃப்டாக இருக்காது. 

இதையும் படிங்க: வாழைப்பழம் தான நல்லதுனு சொல்வாங்க.. ஆனா வாழைத்தண்டு சாறு 1 டம்ளர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

click me!