எப்போதும் ஒரே மாதிரியான புட்டு சாப்பிட்டு அலுத்து போய்டுச்சா! அப்போ ஒரு முறை ரவா புட்டு செய்து சாப்பிடுங்க!

By Asianet Tamil  |  First Published Mar 29, 2023, 11:07 AM IST

வாருங்கள்! டேஸ்ட்டான ரவை புட்டு ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்


மாலை நேர சிற்றுண்டிக்கு நாம் எப்போதும் புட்டு,கொழுக்கட்டை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். புட்டு என்று சொல்லும் போது அரிசி மாவு, கோதுமை மாவு , ராகி மாவு போன்றவற்றை வைத்து தான் புட்டு செய்து சாப்பிட்டு இருப்போம். இதனை தவிர்த்து வேறு எதையாவது வைத்து புட்டு செய்துள்ளீர்களா? அதிலும் ரவை வைத்து புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

ரவை வைத்து கேசரி, உப்மா, தோசை போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் ரவை வைத்து புட்டு செய்துள்ளீர்களா? இல்லையா! அப்படியென்றால் ஒரு முறை ரவை வைத்து புட்டு செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். பின் இதனை வாரம் ஒரு முறையாவது செய்து தரும்படி வீட்டில் இருப்பவர்கள் கூறுவார்கள்.

இந்த புட்டு ரெசிபியை வீட்டில் இருக்கும் சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மற்ற ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் எண்ணெய் சேர்த்து செய்வது போல் இல்லாமல், இதனை ஆவியில் வைத்து சமைக்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு உகந்த ஒரு ரெசிபி ஆகும்.

வாருங்கள்! டேஸ்ட்டான ரவை புட்டு ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

ரவை -1 கப்
உப்பு - சிறிது
ஏலக்காய் பொடி -2 சிட்டிகை
சர்க்கரை - தேவையான அளவு
தேங்காய் துருவல்- தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் ரவையை சேர்த்து , அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
(கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்) வறுத்த ரவையை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ரவையில் சிறிது உப்பு தூவி நன்றாக கலந்து விட்டு, இப்போது தண்ணீர் கொஞ்சம் எடுத்து ரவையில் சிறிது சிறிதாக தெளித்து புட்டு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த ரவையை சல்லடையில் போட்டு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சலித்து வைத்துள்ள ரவையில் சிறிது ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவை சேர்த்து இட்லி சட்டியில் இட்லி தட்டுகளில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் வெந்த பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி விட்டு புட்டினை ஒரு பாத்திரத்தில் மெட்ரிக் கொள்ள வேண்டும். சூடான புட்டி சிறிது நெய் மற்றும் பொடித்த சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டால் கமகமவென்று ஆளை தூக்கும் ரவை புட்டு ரெடி!

இதை செய்தாலே போதும்! விந்து முந்துதலிருந்து, ஆண்மை குறைபாடு வரை பல்வேறு பிரச்சனைகள் சரியாகும்.

Tap to resize

Latest Videos

click me!