பள்ளி முடித்து வரும் குட்டிஸ்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் 10 சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள்!

By Asianet Tamil  |  First Published Mar 27, 2023, 4:52 PM IST

வாருங்கள்! பஞ்சாபியின் புகழ் பாக்கெட் சமோசாவை வீட்டில் எப்படி எளிமையாக வீட்டில் செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


வழக்கமாக நாம் மாலை நேரத்தில் பல விதமான ஸ்னாக்ஸ் ரெசிபியை செய்து சாப்பிட்டு இருப்போம். ஒரு சில ஸ்னாக்ஸ் வகைகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சில வற்றை நாம் கட்டாயப் படுத்துவதால் சாப்பிடுவார்கள். அப்படி அவர்கள் விரும்பி உண்ணும் ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றான சமோசா ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். சமோசா அனைவருக்கும் தெரிந்த ஸ்னாக்ஸ் தானே ! இதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கறீர்களா? இந்த சமோசா பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற பாக்கெட் சமோசா  என்னும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ். 

இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் எத்தனை கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவார்கள். இதனை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவ்ரகளும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை அலாதியாக இருக்கும். வாருங்கள்! பஞ்சாபியின் புகழ் பாக்கெட் சமோசாவை வீட்டில் எப்படி எளிமையாக வீட்டில் செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 1 கப்
ஓமம் - 1/2 ஸ்பூன்
பட்டர் - 2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
தனியா- 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கேரட்- 1
பீன்ஸ் - 5
பச்சை பட்டாணி - 1/4 கப்
உருளைக் கிழங்கு - 1
இஞ்சி- 1 இன்ச்
பச்சை மிளகாய் -2
கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
மஞ்சள்-1/4 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

ராகு காலத்தில் இதை செய்தால் போதும்! கண் திருஷ்டி அனைத்தும் காணாமல் போகும்!

செய்முறை:

முதலில் ஒரு பெரிய தட்டில் மைதா சேர்த்து அதில் உப்பு , ஓமம் மற்றும் சிறிது பட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொன்டு, வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, பூரி மாவு போல் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். தனியா, சோம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் சீரகம், கருஞ்சீரகம் சேர்த்து வறுத்துக் கொண்டு அடுத்து அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கினை சேர்த்து வதக்கி விட்டு பின் மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் கரம் மசாலா, பொடித்து வைத்துள்ள சீரகம்,சோம்பு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். அனைத்து காய்களும் மசாலாவுடன் சேர்ந்து கெட்டியாக வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.

இப்பொது பிசைந்து வைத்துள்ள மாவினை அதிகமாக எடுத்து உருண்டையாக உருட்டி, பின் அதனை சப்பாத்தி கல்லில் வைத்து பெரிய அளவில் தேய்த்து கத்தியால் நாலு துண்டுகளாகவெட்டி ஒவ்வொரு துண்டிலும் மசாலாவை வைத்து 4 பக்கங்களிலும் மடித்து விட வேண்டும். இவ்வாறு அனைத்து மாவினையும் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கனமான வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் அதில் மடித்து வைத்துள்ள சமோசாக்களை ஒன்று , இரண்டாக போட்டு அடுப்பின் தீயினை ம்மில் வைத்து விட வேண்டும். சமோசா இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்த பின் கடாயில் இருந்து எடுத்து எண்ணெய் வடித்து ஒரு தட்டில் வைத்து டொமேட்டோ கெட்சப் வைத்து கொடுத்தால் 10 சாப்பிட்டாலும் பத்தல என்பார்கள்!

Tap to resize

Latest Videos

click me!