சுட்டெரிக்கும் வெயிலிலுக்கு சில்லென்ற நுங்கு ரோஸ்மில்க் செய்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்!

By Asianet Tamil  |  First Published Mar 29, 2023, 11:56 AM IST

வாருங்கள்! கோடை வெயிலுக்கு சில்லென்ற நுங்கு ரோஸ்மில்க் பானத்தை வீட்டில் எப்படி எளிமையாகவும் சுவையாகவும் செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


தமிழகத்தில் கோடை வெயிலினால் நாளுக்கு நாள் வெயில் சக்கை போடு போடுகிறது. இந்த வெயிலை சமாளிக்கவும், உடலில் நீர் சத்தினை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படி நீச்சத்தினை தக்க வைத்துக் கொள்ள நாம் பல்வேறு விதமான பானங்களை எடுத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.

கோடை கால சீசனில் கிடைக்கும் நுங்கு நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் என்றுக் கூறலாம். தவிர கோடை நேரத்தில் வீட்டில் அதிகமானோர் ரோஸ் மில்க் செய்து சாப்பிடுவார்கள். வழக்கமாக செய்யும் ரோஸ் மில்க்கை சற்று வித்தியாசமாக நுங்கு சேர்த்து செய்தல் அதன் சுவை இன்னும் வேற லெவலில் இருக்குமல்லவா! பெயரை சொன்னதுமே செய்து சுவைக்க தோன்றுகிறது அல்லவா ரோஸ்மில்க்கின் சுவையில் நுங்கும் சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவை அலாதியாக இருப்பதால் உங்கள் வீடு குட்டிஸ்களும் சரி, பெரியவர்களும் சரி இதனை செய்து தரும் வரை உங்களையே சுற்றிக் கொண்டு இருப்பார்கள்.தவிர இதனை மீண்டும் மீண்டும் செய்து தருமாறு கேட்பார்கள். இந்த ரோஸ்மில்க்கில் நுங்கும் சேர்த்து செய்யப்படுவதால் இது 2 இந்த ஒன் டேஸ்ட்டை தரும். 

வாருங்கள்! கோடை வெயிலுக்கு சில்லென்ற நுங்கு ரோஸ்மில்க் பானத்தை வீட்டில் எப்படி எளிமையாகவும் சுவையாகவும் செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

இளம் நுங்குச் சுளைகள் - 3
பால் - 3/4 கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
ரோஸ் சிரப் - 1 ஸ்பூன்
சாரைப் பருப்பு -1/4 ஸ்பூன்
நெய் - 1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் நுங்கின் தோலை எடுத்து விட்டு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது நெய் சேர்த்து நெய் உருகிய பின்னர், அதில் பொடித்த சாரைப் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பி ஒரு சாஸ் பான் வைத்து, அதில் பால் ஊற்றி நன்றாக காய்த்துக் கொள்ள வேண்டும். பின் பாலை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பால் நன்றாக ஆறிய பின் அதில் சிறிது ரோஸ் சிரப், வறுத்த பருப்பு மற்றும் அரைத்த நுங்கு ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் இதனை ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்துகே கொண்டு, 1 மணி நேரத்திற்கு பிறகு, ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்து சேர்விங் க்ளாஸில் ஊற்றி அருந்தினால் சுவை தாறுமாறாக இருக்கும்.

எப்போதும் ஒரே மாதிரியான புட்டு சாப்பிட்டு அலுத்து போய்டுச்சா! அப்போ ஒரு முறை ரவா புட்டு செய்து சாப்பிடுங்க!

Tap to resize

Latest Videos

click me!