குறிப்பாக, உடல் எடையை குறைக்க முயற்சித்தால் நெய்யை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் பலரிடம் கேள்விப்பட்டிருக்கலாம்.
பல நூறு ஆண்டுகளாக இந்திய உணவு வகைகளில் நெய் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இருப்பினும், சமீப காலங்களில், நெய் தொடர்பான பல கட்டுக்கதைகளை மக்கள் நம்பி வருகின்றனர். அதிலும், குறிப்பாக, உடல் எடையை குறைக்க முயற்சித்தால் நெய்யை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் பலரிடம் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இது உண்மையா? இந்த ஆரோக்கியமான கொழுப்பை உங்கள் உணவில் இருந்து விலக்க வேண்டுமா? சரி, நெய்யைச் சுற்றியுள்ள பல கட்டுக்கதைகள் குறித்து தற்போது பார்க்கலாம். ஆனால் அதே நேரம்,, உங்கள் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பல நன்மைகளையும் பார்க்கலாம்..
கட்டுக்கதை 1: நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்
நெய் கொழுப்பை உண்டாக்குகிறது என்பதும் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது என்பது பரவலான கட்டுக்கதை. இது கலோரி அடர்த்தியாக இருந்தாலும், அது நேரடியாக உடல் எடையை அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல. இதில் நடுத்தர கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை செரிமானம் மற்றும் கொழுப்பாக சேமிக்கப்படுவதை விட ஆற்றலுக்காக உடலால் பயன்படுத்தப்படுகின்றன. இது பியூட்ரிக் அமிலத்திலும் நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது.
மழைக்கால நோய்கள் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சக்திவாய்ந்த மூலிகைகள்..
கட்டுக்கதை 2: நெய்யில் கொலஸ்ட்ரால் அதிகம்
மற்றொரு தவறான கருத்து என்னவென்றால், நெய்யில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெய்யில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது உண்மைதான், ஆனால் ஆராய்ச்சியின் படி உணவுக் கொலஸ்ட்ரால் ரத்தக் கொழுப்பை பாதிக்காது. மேலும் அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது நல்ல கொழுப்பு அமிலங்களின் வளமான மூலமாகும், இது இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கட்டுக்கதை 3: நெய்யில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்
நெய் பற்றிய மற்றொரு பொதுவான கட்டுக்கதை என்னவென்றால், நெய்யில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இருப்பினும், பல பொதுவான சமையல் எண்ணெய்களை விட நெய் அதிக புகை புள்ளியைக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துவது முக்கியம், இது அதிக வெப்பமான சமையலுக்கு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது. குறைந்த புகைப் புள்ளிகளைக் கொண்ட எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது ஏற்படும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் வெளியீட்டைத் தடுக்க இது உதவுகிறது.
கட்டுக்கதை 4: நெய்யில் ஊட்டச்சத்து இல்லை
நெய்யில் ஊட்டச்சத்து நன்மைகள் இல்லை என்பது பரவலான தவறான நம்பிக்கைகளில் ஒன்றாகும். ஆனால் நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, ஈ மற்றும் கே2 ஆகியவை உள்ளது, இது இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடு மற்றும் பார்வைக்கு நன்மை பயக்கும்.
கட்டுக்கதை 5: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நெய் தீங்கானது
அனைத்து கொழுப்புகளும் உயர் ரத்த அழுத்தத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நெய் தீங்கு விளைவிக்கும் என்ற தவறான கருத்து உருவாகிறது. ஆனால் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களின் நல்ல சமநிலையை நெய் கொண்டுள்ளது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
கட்டுக்கதை 6: பால் பொருட்கள் அலர்ஜி கொண்டவர்கள் நெய்யை உட்கொள்ளக்கூடாது
பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடும் போது அலர்ஜி ஏற்படும் நபர்கள் நெய்யை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது அவர்களின் நிலையை மோசமாக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும், இது உண்மையல்ல, ஏனெனில் நெய்யில் பால் திடப்பொருள்கள் எதுவும் இல்லை என்பதால் பால் அலர்ஜி கொண்ட நபர்களும் நெய்யை சாப்பிடலாம்.