இன்று மாலை டீயுடன் சுவையான "சோயா கபாப்" சாப்பிடுங்கள்; செய்முறை இதோ..!!

சுவையான சோயா கபாப் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம். இது இது வெஜ் மற்றும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.


பொதுவாக நாம் மாலை வேலையில், தேநீருடன் சுவையான மற்றும் காரமான ஒன்றை சாப்பிட விரும்புகிறோம். என்றோ ஒருநாள் மாலையில் திடீரென்று ஒரு விருந்தினர் வீட்டிற்கு வருகிறார். அச்சமயத்தில், பெரும்பாலான பெண்கள் அவர்களுக்கு என்ன சிறப்பு உணவளிப்பது என்று கவலைப்படுகிறார்கள். இனி கவலை வேண்டாம். ஏனென்றால், நீங்கள் விரைவாகவும் சுவையாகவும் 'சோயா கபாப்களை' வீட்டிலேயே தயார் செய்யலாம். இது வெஜ் மற்றும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவது உண்டு. மேலும் இது ஆரோக்கியமானது. ஆகையால் இங்கு நாம் சுவையான சோயா கபாப் எப்படி செய்வது என்பதை குறித்து பார்க்கலாம்.

சோயா கபாப் செய்ய தேவையான பொருட்கள்:

Latest Videos

சோயா துண்டுகள் - 100 கிராம்
கடலை மாவு - 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 கப்
கொத்தமல்லி தூள்
சிவப்பு மிளகாய்
உலர் மாங்காய் பொடி
கரம் மசாலா
இஞ்சி-பூண்டு விழுது
எலுமிச்சை சாறு
கருப்பு மிளகு தூள்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

எளிதான சோயா கபாப் செய்முறை:

1. சோயா கபாப் செய்ய, முதலில் சோயா துண்டுகளை வெந்நீரில் ஊற வைக்கவும்.

 2. அதன் பிறகு, கடலை பருப்பை சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும். 

 3. இப்போது சோயா துண்டுகளை தண்ணீரில் இருந்து எடுத்து நன்றாக பிழிந்து கொள்ளவும்.  

 4. இதற்குப் பிறகு சோயா துண்டுகள் மற்றும் ஊறவைத்த கடலை பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 5. இப்போது இந்த பேஸ்ட்டில் கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

 6. அதன் பிறகு, அதனுடன் உப்பு, மல்லித்தூள், சீரகத் தூள், சாட் மசாலா, காய்ந்த மாங்காய் தூள், கரம் மசாலா சேர்த்து கலக்கவும்.

 7. இப்போது அதனுடன் ஒரு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

 8. இதற்குப் பிறகு, உங்கள் கைகளில் சிறிது எண்ணெய் தடவி, கலவையிலிருந்து கபாப்களைத் தயாரிக்கவும்.

 9. பின் அவற்றை ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும்.

 10. இப்போது சுவையான சோயா கபாப் தயார். இதை பச்சை சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிடலாம்.

click me!