தென்னிந்திய உணவுகளில் பரோட்டாவிற்கு தனி இடம் உண்டு. பிரியாணிக்கு அடுத்த படியாக பரோட்டாவிற்கு தான் அதிகமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த பரோட்டா தற்போது உலக அளவில் புகழ்பெற்றதாக மாறி உள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற 50 ரோட்டோர உணவுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது தென்னிந்திய பரோட்டா.
உலகப் புகழ்பெற்ற உணவு மற்றும் பயண வழிகாட்டி 'டேஸ்ட் அட்லஸ்' வெளியிட்ட உலகின் சிறந்த 50 பிரெட்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் பரோட்டா 6வது இடத்தைப் பிடித்துள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது. உணவின் மொத்த தரமும், சுவையின் தனித்துவமும் அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை வெளியிடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
டேஸ்ட் அட்லஸ் அமைப்பானது உலகின் சிறந்த உள்ளூர் அல்லது ரோட்டோர கடை உணவுகளை ஆய்வு செய்து, அவற்றின் தரம், சுவை மற்றும் மக்களிடம் அந்த உணவிற்கு இருக்கும் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உணவுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2025 ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்திய உணவுகள் பலவும் இதில் இடம்பிடித்துள்ளன.
டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட பட்டியலில் இடம்பிடித்த இந்திய உணவுகள் :
பட்டர் கார்லிக் நாண் முதலிடம் (1வது இடம்)
தென்னிந்திய பரோட்டா 6வது இடம்
நாண் 8வது இடம்
வட இந்திய பரோட்டா 18வது இடம்
பட்டூரா 26வது இடம்
ஆலு நாண் 28வது இடம்
ரொட்டி 34வது இடம்
சமையலில் காரம் அதிகமாகிடுச்சா? கவலையவிடுங்க...இதோ ஈஸியான முறையில் குறைப்பதற்கான டிப்ஸ்
தமிழ்நாட்டு பரோட்டா :
தமிழ்நாட்டில் பரோட்டா என்பது வெறும் உணவல்ல, அது ஒரு கலாச்சாரத்தின் அனுபவம் ஆக மாறி உள்ளது. தமிழர் உணவுப் பாரம்பரியத்தில் பரோட்டா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மென்மையான, மொறு மொறுப்பானது என பல வடிவங்களில் பரோட்டாக்கள் தயார் செய்யப்படுகின்றன. ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக இது மாறி உள்ளது. இது சைவ, அசைவ பிரியர்களுக்கு ஏற்றாற் போல் பல ரகங்களில் செய்யப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு ஊர் பரோட்டாவும், அதற்கு கொடுக்கப்படும் சைட் டிஷ்களும் தனித்துவம் வாய்ந்ததாக இருப்பது தான் இதன் தனிச்சிறப்பே.
பரோட்டாவின் பல்வேறு வகைகள்:
சாதா பரோட்டா – அடிப்படை வகை, மென்மையாகவும் பிசைந்த கலவையுடன் தயாரிக்கப்படும்.
வீச்சு பரோட்டா – பல தடவைகள் மடித்து நீட்டப்படுவது, இதன் மிருதுவான தன்மை பிரபலமானது.
முட்டை பரோட்டா – பரோட்டாவுடன் முட்டையைச் சேர்த்து சுவையில் தனித்தன்மை கொடுக்கும்.
பன் பரோட்டா – மெல்லிய, சற்று உப்பலான தன்மை கொண்ட பரோட்டா.
பொரித்த பரோட்டா – மொறுமொறுப்பாக கடினத்தன்மையான இதை சால்னாவில் ஊற வைத்து சாப்பிடுவது தனி சுவை.
லாஃபா பரோட்டா – மிருதுவான பரோட்டா.
கேரளா பரோட்டா – பரோட்டாவின் பிரபலமான வடிவம், பல அடுக்குகளுடன் சிறப்பாக இருக்கும்.
பட்டன் பரோட்டா – சிறு உருண்டையான வடிவத்தில் மெருகேற்றப்பட்ட பரோட்டா.
பலாக்கொட்டை மில்க் ஷேக்... சிம்பிளான, சூப்பர் ரெசிபி
உலக ஃபேமசான பரோட்டா :
தமிழ்நாட்டில் பரோட்டா என்பது ஒரு உணவுப் புரட்சி. ஒவ்வொரு தெரு உணவகத்திலும் இருந்து ப்ரீமியம் ஹோட்டல்கள் வரை பரோட்டாவின் ஆதிக்கம் நிரந்தரமானது. இது ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் ஈர்க்கக்கூடிய "மக்களின் உணவு" என்பதைக் காட்டுகிறது. இந்நிலையில், பரோட்டா உலகளவில் பாராட்டப்படுவது பெருமைக்குரியது. தமிழர்களின் பாரம்பரிய உணவு உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவது உணவுப் பாசத்திற்கான ஒரு அற்புதமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற உணவாக பரோட்டா இருந்தாலும் இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான தனிச்சுவையுடன் இருப்பது உள்ளூர்காரர்களை மட்டுமல்ல வெளிநாட்டினரையும் சுண்டி இழுப்பதாக உள்ளது.