நீர் தோசை என்பது வழக்கமான தோசைக்கு நல்ல மாற்றாக அமையும். மொறு மொறுவென்றும், மென்மையாகவும் இருக்கும் இந்த தோசை பலருக்கும் பிடித்த சுவையாக இருக்கும். இதை ஆப்பம் போலவும் செய்து, தேங்காய் பால் சேர்த்து சாப்பிடுவதால் மிகுந்த சுவையானதாக இருக்கும்.
தென்னிந்திய சமையலில் தோசைக்கு ஒரு தனி இடம் உள்ளது. தோசையின் பல வகை முறைகளில், நீர் தோசை என்பது கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் தோன்றிய, ஆனால் தமிழ்நாட்டிலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு மிக எளிய, ஆனால் சுவைமிக்க உணவாகும். இந்த தோசை மாவு மிகவும் நீர்ச்சத்து கொண்டதாக இருக்கும் என்பதால் இதை நீர் தோசை என்கிறோம். இதனால், மற்ற தோசைகளைப் போல புளிக்க விட தேவைப்படாது. எளிதாக மிக விரைவில் தயாரிக்கலாம்.
நீர் தோசை தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் – 1/4 கப் (துருவியது)
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தோசை சுட தேவையான அளவு
நீர் தோசை செய்முறை :
- பச்சரிசியை 4 முதல் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
- அதனுடன் தேங்காய் துருவல், உப்பு, மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக மென்மையாக அரைக்கவும்.
- மாவு இரண்டு கைப்பிடி நீர் போல மிகவும் மெல்லியதாக இருக்க வேண்டும். இதை சலித்து, கூடுதல் தண்ணீர் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.
- தோசைக் கல்லை நன்றாக சூடாக்கி, ஒரு கரண்டி மாவை எடுத்து நீர் தெளிப்பது போல தோசைக் கல்லில் வார்க்க வேண்டும் (மாவு திரண்டால் கெட்டியாகிவிடும், அதனால் மெல்லியதாக இருக்க வேண்டும்).
- மிதமான தீயில் ஒருபுறம் மட்டும் வேகவிட்டு, மறுபுறம் திருப்பாமல் எடுக்க வேண்டும்.
- தோசை வெண்மையாக, மென்மையாக, மற்றும் சிறிது கிழிந்தது போல இருக்கும் – இதுவே நீர் தோசையின் தனித்துவம்!
கொய்யா பழத்தை வைத்து சுவையான சட்னி...வித்தியாசமா இப்படி செய்து பாருங்க
நீர் தோசையின் சிறப்புகள் :
- தயாரிக்க எளிது. புளிக்க விட தேவையில்லை, அரைத்த உடனே சுடலாம்.
- மென்மையானது . குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் மிகவும் ஏற்றது.
- கலோரிக் குறைவாகும் . பொரித்த உணவுகளுக்கு மாற்றாக, உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வு.
நீர் தோசை சிறந்த சைட் டிஷ் :
- தேங்காய் சட்னி இயற்கையான சுவை சேர்க்கும்.
- கருவேப்பிலை தேங்காய் ஆகியன மருத்துவ குணம் மிக்கது.
- காய்கறி சாம்பார் மிகவும் நல்ல புரத உணவாகும்.
- வெல்லம் மற்றும் தேங்காய் சேர்ப்பது, இனிப்பு சேர்க்க விரும்புவோருக்கு சிறந்த இணைப்பு!