வழக்கமாக செய்யும் சாதங்களையே மீண்டும் மீண்டும் செய்து போரடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் வகையில், ஈஸியாகவும் செய்யக் கூடிய மசாலா ரைஸ் ஒரு முறை செய்து பாருங்க. சட்டென வேலை முடியும். குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
உணவுப் பிரியர்கள் தினமும் புதிய சுவையில் உணவு வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதே போல் குழந்தைகளும் தினமும் புதிய உணவுகளை லஞ்ச் பாக்சில் எடுத்துச் செல்ல விரும்புவார்கள். அவர்களுக்கு சாதாரண சாதத்திற்கு பதிலாக, மசாலா சாதம் செய்து கொண்டுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இது சுவை, மணம் நிறைந்ததாக இருப்பதுடன், அதிக கஷ்டமில்லாமல் ஈஸியாகவும் செய்து விடலாம். முக்கியமாக, இது நேரம் குறைவாக இருக்கும் காலங்களில் கைகொடுக்கும். அலுவலகத்திற்கு தயாராகும் போதும், குழந்தைகளுக்கான உணவாகவும், இரவு நேரத்தில் தோசைக்கு மாற்றாகவும் இது அருமையான தேர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சில
புதினா மற்றும் கொத்தமல்லி – ஒரு சிறு கைப்பிடி (நறுக்கியது)
மசாலா சேர்க்க:
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கேரள ஸ்பெஷல் குழாய் புட்டு - கடலை கறி ரெசிபி...செம ஹெல்தி பிரேக்பாஸ்ட்
தாளிக்க:
நல்லெண்ணெய் அல்லது நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
சோம்பு – 1/2 டீஸ்பூன்
மசாலா சாதம் செய்முறை :
- அரிசியை நன்கு கழுவி, வெந்தவுடன் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பெரிய கடாயில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, மெலிதாக வதக்கவும்.
- வெங்காயம் பழுப்பு நிறமாக வந்ததும், தக்காளி சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
- இப்போது, மசாலா தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- ஏற்கனவே வேகவைத்த சாதத்தை சேர்த்து, நன்றாக கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடம் விடவும்.
- இறுதியாக, புதினா மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கவும்
மசாலா சாதத்துடன் சிறந்த சைட்டிஷ் :
- தயிர் மற்றும் வெங்காய மொறுமொறு சாலட்
- கடையறுப் பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு ஃபிரை
சுட்ட பப்படம் மற்றும் வறுத்த முட்டை
தினமும் ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா? கர்நாடகா ஸ்டைல் திலி சாறு செஞ்சு பாருங்க
மசாலா சாதம் சிறப்பு :
- குறைந்த நேரத்தில் சுலபமாக செய்யலாம்
- கமகமவென்ற வாசனைக்கே பசிக்கூட்டும் சாதம்
- சாதாரண சாதத்திலிருந்து வித்தியாசமான மாற்றம்
- பயணத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்றது.