வான்கோழி இறைச்சியில் மட்டன் சிக்கனை மிஞ்சும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இந்த இறைச்சியை சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
Heal Benefits Of Turkey Meat : பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சிக்கன், மட்டன் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகமாக விரும்பி சாப்பிடும் இறைச்சி எதுவென்றால் அது, 'வான்கோழி' தான். இந்த இறைச்சி மேற்கத்திய கலாச்சாரத்தில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வான்கோழி இறைச்சி அதிகளவில் சாப்பிடப்படுகிறது மற்றும் விற்பனையாகிறது. வான்கோழி இறைச்சி புரதத்தின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. முக்கியமாக வான்கோழி இறைச்சியில் சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அவை ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. இப்போது வான்கோழி இறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: சிக்கன்: தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
வான்கோழி இறைச்சியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
ஒரு கப் வான்கோழி இறைச்சியில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்புகள் : 4.9 கிராம் புரதம், 4.5 கிராம் கொழுப்புச்சத்து, 6 மில்லி கிராம் சோடியம், 427 மில்லி கிராம் பொட்டாசியம், 1.9 மில்லி கிராம் இரும்புச்சத்து, 39.2 மில்லி மெக்னீசியம், 26.6 மில்லி கிராம் கால்சியம், 44.9 mcg செலினியம், 8.4 mcg 48 போலேட், 0.5 mcg வைட்டமின் பி12 மற்றும் பூஜ்ஜியம் கிராமிற்கும் குறைவாகவே கார்போஹைட்ரேட் உள்ளன. இப்போது வான்கோழி இறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: மட்டனை இந்த '1' பிரச்சனையோட சாப்பிட்டால் ரொம்ப ஆபத்து.. சத்துகள் கிடைக்காது
வான்கோழி இறைச்சி ஆரோக்கிய நன்மைகள் :
1. எடை இழப்புக்கு உதவும்:
வான்கோழி இறைச்சியில் புரதம் அதிக அளவு நிறைந்துள்ளதால், புரதச்சத்து தேவைப்படுவோர் கண்டிப்பாக இந்தக் கறியை சாப்பிடலாம். ஒருவேளை இந்த இறைச்சியை சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் உங்களது வயிறு நிரம்பிய உணர்வில் இருக்கும். இதில் கொழுப்பும் குறைவாக உள்ளதால் எடையை சுலபமாக குறைத்து விடலாம். அதுமட்டுமின்றி உடலுக்கு தேவையான ஆற்றலை இது தக்க வைக்கும். மேலும் இதில் இருக்கும் புரதச்சத்து தசைகளை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
வான்கோழி இறைச்சியானது உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. இதில் இருக்கும் பண்புகள் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு வராமல் தடுக்கும்.
3. மூட்டு வலிக்கு நல்லது
வான்கோழி இறைச்சியில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்கள் மூட்டுகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, கீழ்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர மன அழுத்தத்தை குறித்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். மேலும் புத்தி கூர்மையை அதிகரிக்கும்.
4. ரத்த சோகையை எதிர்த்து போராடும்:
வான்கோழியில் வைட்டமின் பி12 மற்றும் 4 பேலேட் உள்ளதால், அவை ரத்த சோகையை நிர்வகிக்க உதவுகிறது. அதாவது இவை இரண்டும் தான் ரத்த அணுக்களின் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வான்கோழி இறைச்சி சாப்பிட்டால் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை எதிர்த்து போராடும்.
5. புற்றுநோய்:
வான்கோழியில் செலினியம் உள்ளதால் இது புற்றுநோய் எதிர்ப்பு பண்பை உருவாக்கும் தன்மையை உள்ளடக்கியது. செலினியம் என்பது புற்று நோய்க்கு எதிராக போராடும் பண்புகளை கொண்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன.