தினமும் ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா? கர்நாடகா ஸ்டைல் திலி சாறு செஞ்சு பாருங்க

Published : Mar 08, 2025, 08:55 PM IST
தினமும் ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா? கர்நாடகா ஸ்டைல் திலி சாறு செஞ்சு பாருங்க

சுருக்கம்

தினமும் நம்ம ஊர் ரசம் சாப்பிட்டு போரடித்து விட்டது என நினைக்கிறீர்களா? அப்படியானால் கர்நாடக ஸ்பெஷல் திலி சாறு ஒரு நாள் செய்து பாருங்க. இதுவும் ரசம் மாதிரி தான். ஆனால் தனித்துவமான சுவையுடன் இருக்கும். ஒருமுறை செய்து பாருங்க. இதன் சுவையில் அசந்து போய் விடுவீர்கள்.

தென்னிந்திய உணவுகளில் கர்நாடகாவின் திலி சாறு (Thili Saaru) ஒரு தனிப்பட்ட இடம் பெறுகிறது. சாதாரண ரசத்தினை விட மிக எளிமையாக, ஆனால் சூப்பரான மணமும் சுவையும் கொண்ட இந்த சாறு கர்நாடக உணவின் ஒரு முக்கியமான பாரம்பரிய உணவு. இதை சாதத்துடன், தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடன் சூடாக பரிமாறினால், உணவின் சுவை மேலும் உயர்ந்து விடும். எளிமையான முறையில் கர்நாடகா ஸ்டைல் திலி சாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு – 1/2 கப் (வேகவைத்தது)
தக்காளி – 1 (நன்றாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1/2 அங்குல துண்டு (அரைத்தது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கொத்தமல்லி இலைகள் – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – 7-8 இலைகள்
மிளகு, சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 3 கப்

தினசரி காலையில் அலாரமே இல்லாமல் சீக்கிரம் எழுந்திருக்கணுமா? இந்த சூப்பர் டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

நல்லெண்ணெய்  – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2

திலி சாறு செய்முறை :

- ஒரு குக்கரில் துவரம் பருப்பை 2 கப் தண்ணீர், சிறிதளவு மஞ்சள் தூள், மற்றும் ஒரு சிட்டிகை உப்புடன் 3-4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
- வெந்த பிறகு, ஒரு கைப்பிடி அளவு பருப்பை மட்டுமே எடுத்துக் கொண்டு, மீதியை நீருடன் சேர்த்து ஒரு மெல்லிய கலவையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு-சீரக தூள், உப்பு, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
- இதை மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதில் உள்ள தக்காளி நன்றாக மசிந்து, வெந்து வர வேண்டும்.
- பிறகு, மசித்த பருப்பு நீரை சேர்த்து 5 நிமிடம் மேலும் கொதிக்க விட வேண்டும்.
- ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, வெந்தயம், சிவப்பு மிளகாய், மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
- இது நல்ல நறுமணம் வந்தவுடன், கொதிக்க இருக்கும் சாறில் சேர்க்க வேண்டும்.
- இப்போது, திலி சாறு நன்றாக அருமையான மணத்துடன் இருக்கும்.
- அடுப்பை அணைத்து, இன்னும் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

 சிறப்பு குறிப்புகள் :

- சாதம் மீது சிறிது நெய்யுடன் சேர்த்து பரிமாறினால், அருமையான சுவை வரும்.
- தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சூடாக பரிமாறலாம்.
- சாறின் மசாலா அளவை மாற்றி, காரத்தன்மையை விருப்பப்படி அதிகரித்துக் கொள்ளலாம்.
- சிறிது புளியை சேர்த்தால், இன்னும் தனி சுவை கிடைக்கும்.
- தேங்காய் துருவல் சிறிது சேர்த்தால், சுவை மேலும் உயர்ந்துவிடும்.
- சிலர் இதனை சூடாக குடிக்கவும் விரும்புவர் . இது உடல் சூட்டை தணிக்கவும், ஜீரணத்தை மேம்படுத்தவும் உதவும்.

சாப்பிட்டதும் காபி குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? உடனே நிறுத்துங்க..ஆபத்து காத்திருக்கு

திலி சாறின் ஆரோக்கிய நன்மைகள் :

- மிளகு, சீரகம் சேர்ப்பதால், வயிற்று பிரச்சனைகளை குறைக்க உதவும்.
- இந்த சாறு மிகவும் எளிமையாக இருக்கும், இதனால் வயிற்றுக்கு குளிர்ச்சியாக செயல்படும்.
- இஞ்சியும் மிளகும் சேர்த்ததால், இதனை ஜலதோஷத்திற்கு, சளிக்கு ஒரு இயற்கை நிவாரணமாகக் கருதலாம்.

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!