சிறுநீரக கற்களை உடனே கரைக்கும் சுவையான வாழைத்தண்டு சட்னி

Published : Mar 08, 2025, 08:33 PM IST
சிறுநீரக கற்களை உடனே கரைக்கும் சுவையான வாழைத்தண்டு சட்னி

சுருக்கம்

வாழைத்தண்டில் பொரியல், கூட்டு சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. வாழைத்தண்டு பிடிக்காது என்பவர்கள் கூட இந்த சட்னியை,  இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

வாழைத்தண்டு , தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் முக்கியமானது. இதன் நன்மைகள் எண்ணற்றவை . செரிமானத்தை மேம்படுத்தும், உடலில் நீர் அளவை சமநிலைப்படுத்தும், சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பலருக்கும் வாழைத்தண்டு சமைப்பது சிரமமாக இருக்கும். ஆனால் சில எளிய நுட்பங்களைப் பயன்படுத்தி விரைவாகவும் சுவையாகவும் இந்த சட்னியை தயார் செய்யலாம்.

வாழைத்தண்டு சட்னி தயாரிக்கும் எளிய முறைகள்; 

- இளசான, பச்சை நிறம் கொண்ட வாழைத்தண்டுகளை மட்டும் பயன்படுத்தவும். பழுப்பு நிறம் கொண்ட மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட வாழைத்தண்டுகள் கடினமாக இருக்கும்.
- வாழைத்தண்டை பொடியாக நறுக்கியவுடன், பசுமை நிறம் நீங்காமல் இருக்க தயிர் கலந்த தண்ணீரில் ஊற வைக்கலாம். இதன் மூலம் நார்ச்சத்து குறையாமல், மேலும் சட்னிக்கு கசப்பு தோன்றாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு – 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – 1/4 கப்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – 5 இலைகள்
இஞ்சி – 1/2 அங்குல துண்டு
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
எள்ளு அல்லது நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி – 1/2 (விரும்பினால் சேர்க்கலாம்)
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன் (சுவைக்கு)

காதல் வெற்றியாக இந்த தெய்வங்களை கும்பிட்டாலே போதும்

செய்முறை:

- வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, சிறிது தயிர் கலந்த நீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வாழைத்தண்டை சேர்த்து நன்றாக வதக்கி, ஆறிய பிறகு தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- சிறிது எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து மேல் சேர்க்கவும்.

 வாழைத்தண்டு சட்னியின் ஆரோக்கிய நன்மைகள்:

- வாழைத்தண்டு அதிக நார்ச்சத்து கொண்டதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
- வாழைத்தண்டின் இயற்கை குளோரோஃபில், சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகப் பயனளிக்கும்.
– குறைந்த கலோரி கொண்டதால், உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வு.
– இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும்.

எந்த உணவுகளுடன் சாப்பிடலாம்?

தோசை, இட்லிக்கு சிறப்பாக பொருந்தும்.
கோதுமை ரொட்டி உடன் சாப்பிடுவதால் ஆரோக்கியமான நாச்சத்து கிடைக்கும்.
சாதம் மற்றும் பருப்பு ரசம் உடன் தெவிட்டாத சுவையில் சேர்த்துப் பரிமாறலாம்.
மிலேட் (சிறு தானிய) சாதம் உடன் சாப்பிட ஆரோக்கிய உணவாக இருக்கும்

இந்த 6 விஷயம் தெரிஞ்சா போதும்...நீங்களும் சமையல் எக்ஸ்பெர்ட் ஆகிடலாம்

வாழைத்தண்டு சட்னிக்கு சுவை சேர்க்க :

- சட்னிக்கு சிறிய எலுமிச்சைச் சாறு சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும்.
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்தால் சட்னிக்கு அழகும், நல்ல மணமும் கிடைக்கும்.
- சிறிது வறுத்த பருப்பு சேர்த்தால் சட்னி அதிக நேரம் பசுமையாக இருக்கும்.
- எண்ணெய் அளவாக சேர்த்து தாளித்தால் சட்னி மிக சுவையாக இருக்கும்.

வாழைத்தண்டு சட்னி உங்கள் ஆரோக்கியத்திற்கும், உணவு சுவைக்கும் மிகவும் பயனளிக்கும். இந்த எளிய முறைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுவையான மற்றும் மணமுள்ள வாழைத்தண்டு சட்னியை தயார் செய்யலாம். இதை நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால், மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவீர்கள்.

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!