
சுண்டைக்காயில் பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன. இதில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன, அவை நமது உடலுக்கு பல்வேறு வழிகளில் உதவுகின்றன.
சுண்டைக்காயின் சில முக்கிய நன்மைகள்:
சுண்டைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன, இதனால் உடலில் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. சுண்டைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க இது உதவுகின்றன. குறிப்பாக மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கு இது நன்மை பயக்கிறது.
சுண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவு. இது செரிமான அமைப்பை சீராக வைத்திருக்கவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது. சில ஆய்வுகள் சுண்டைக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றன. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு ஆரோக்கியமான உணவு விருப்பமாக இருக்கும்.
சுண்டைக்காய் பாரம்பரிய மருத்துவத்தில் சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.இதில், இரும்புச்சத்து கணிசமாக உள்ளதால் இரத்த சோகையைத் தடுக்கவும், உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
சுண்டைக்காய் குழம்புசெய்வதற்கு தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 10-12
தக்காளி - 1
பூண்டு - 4-5 பற்கள்
மிளகாய்த்தூள் - 1-2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி கரைசல் - 1/4 கப்
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சுண்டைக்காய் குழம்பு செய்முறை:
சுண்டைக்காயை நன்றாக கழுவி, லேசாக நசுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அதன் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும், இதனுடன் சுண்டைக்காயை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும். புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான சுண்டைக்காய் குழம்பு தயார்.
சுண்டைக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது மட்டுமல்லாமல், அதை வைத்து ருசியான குழம்பும் செய்ய முடியும் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். உங்கள் உணவில் சுண்டைக்காயை சேர்த்து அதன் பலன்களைப் பெறுங்கள்.