ஆரோக்கியமான வாழ்விற்காக புத்தாண்டில் பல புதிய தீர்மானங்களை எடுக்கிறோம். அதில் உணவிற்கும் பெரும் பங்கு உள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில ரெசிபிகளை எளிதாக வீட்டிலேயே தயார் செய்து பாருங்கள்.
நம்முடைய உடல் நன்றாக இயங்க ஆரோக்கியமான உணவு வகைகள் இனியமையாதது. உடற்பயிற்சிகள் 20 விழுக்காடுதான் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. நேரம் தவறாமல் உணவு எடுத்துக் கொள்வத, துரித உணவுகளை தவிர்ப்பது போன்றவை நம் உடலுக்கு நன்மை பயக்கும். இது தவிர எளிமையாக செரிமான ஆகும் உணவுகளையும் நாம் உண்ணலாம். இந்த புத்தாண்டில் இருந்து ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்து கொள்ளவேண்டும் என தீர்மானியுங்கள். அதற்கு உதவியாக சில ரெசிபிகளை இங்கு இணைத்துள்ளோம்.
இதையும் படிங்க; ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கும் அன்னாசியின் அற்புத பலன்கள்
undefined
வெள்ளரி தக்காளி சான்விட்ச்
பழுப்பு அல்லது வெள்ளை ரொட்டி துண்டுகள் 8 முதல் 10 எடுத்துகொள்ளுங்கள். மீடியம் அளவில் ஒரு கப் தக்காளி, வெள்ளரி, கருப்பு மிளகு அல்லது மிளகாய் தூள், சீரகத் தூள், வெண்ணெய், உப்பு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள்.
செய்முறை
தக்காளி, வெள்ளரி ஆகிய இரண்டையும் ஒரு சில முறை சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர் அதனை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். பிரெட்டின் முனையை நீக்கிவிடுங்கள். அதன் மீது வெண்ணெய்யை சமமாக தடவி கொள்ளுங்கள். தக்காளி, வெள்ளரி துண்டுகளை பிரெட்டில் வைக்கவும். தக்காளி-வெள்ளரி துண்டுகள் மீது 2-3 சிட்டிகை மிளகாய் தூள், சீரகத் தூள், உப்பு ஆகியவற்றை தூவி வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட் துண்டுடன் அதை மூடி கொள்ளுங்கள். அதிக கலோரிகள் இல்லாத வெள்ளரி தக்காளி சான்ட்விச்களை இப்போது பரிமாறலாம்.
கேரட் கேக்
நல்ல தரமான கேரட் 100 கிராம், 65 கிராம் மைதா மாவு, சர்க்கரை, 1 முட்டை, 65 மி.லி எண்ணெய், பேக்கிங் சோடா 2 கிராம், உப்பு 2 கிராம், முந்திரி,பிஸ்தா, உலர் திராட்சை, இலவங்கப்பட்டை 2 கிராம், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
செய்முறை
கேரட்டைத் துருவி எடுத்துக் கொள்ளவும். முட்டை (மஞ்சள் கரு நீக்கி), எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, உப்பு, இலவங்கப்பட்டை தூள், பேக்கிங் சோடா ஆகியவை சேர்த்து கலந்துவிடுங்கள். இதனுடன் பால் கலந்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் முந்திரி,பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவையும் சேர்த்து பிசையவும். இதனை கேக் பதத்தில் ஒரு பாத்திரத்தில் ஊற்றி சுமார் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை மைக்ரோ ஓவனில் பேக் செய்யவும். இப்போது சுவையான கேரட் கேக் தயார். மைக்ரோ ஓவன் இல்லாதவர்கள் குக்கரில் முயன்று பார்க்கலாம். இது தொடர்பாக யூடியூபில் பல வீடியோக்கள் கிடைக்கின்றன.
தேங்காய் பால் சாதம்
ஒரு கப் அரிசி, அரை கப் தேங்காய்ப்பால், அரை கப் தண்ணீர், 3 கிராம்பு, 1 இலவங்கப்பட்டை, 1 வெங்காயம், 1 தக்காளி, 4 மிளகாய், ருசிக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
செய்முறை
பிரஷர் குக்கரில் கொஞ்சமாக நெய்யை ஊற்றவும். கிராம்பு, இலவங்கப்பட்டை, முந்திரி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அரிசியைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். பின்னர் தேங்காய் பால், தண்ணீர் மற்றும் உப்பு பயன்படுத்தவும். தண்ணீர் சூடாகும்போது குக்கரை மூடி, குறைந்த தீயில் சுமார் 15 நிமிடங்கள் சமைக்கவும். சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
எள் சோள கிராம்ஸ்
கால் கப் சோள மாவு, கால் கப் கோதுமை மாவு, அரை தேக்கரண்டி எள், அரை தேக்கரண்டி ஈஸ்ட், உப்பு, 1 தேக்கரண்டி வெண்ணெய் ஆகியவை எடுத்து கொள்ளுங்கள்.
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி மென்மையான மாவாக பிசைந்து கொள்ளுங்கள். அந்த மாவினை ஈரமான துணியால் மூடி, சுமார் 15 நிமிடங்கள் வைக்கவும். மாவை சாதாரண தடிமனாக எடுத்து அகலமாக கீற்றுகள் போல வெட்டவும். அதனை பேக்கிங் ட்ரேயில் வைத்து 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 40 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை வைக்கவும். இதனை காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். இந்த ஆரோக்கியமான உணவுகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
இதையும் படிங்க; #Star anise நலம் தரும் நட்சத்திர சோம்பு.. பாலியல் வாழ்க்கையின் ப்ளஸ்