க்ரிஸ்பி அண்ட் டேஸ்ட்டி ராகி முறுக்கு ஈஸியா செய்யலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Dec 31, 2022, 12:12 PM IST
Highlights

வாருங்கள்! ருசியான கேழ்வரகு முறுக்கினை வீட்டில் என்று இந்த தெரிந்து கொள்ளலாம். 

வழக்கமாக நாம் அனைவரும் முறுக்கு ,தட்டை,சீடை போன்ற போன்றவற்றை அரிசி மாவினால் தான் செய்து சாப்பிட்டு இருப்போம். 
ஆனால் இன்று நாம் சற்று வித்தியாசமாக கேழ்வரகு எனப்படும் ராகி மாவினை கொண்டு ஆரோக்கியமான மற்றும் ருசியான முறுக்கு ரெசிபியை காண உள்ளோம்.

கேழ்வரகில் செய்யப்படுவதால் வளரும் குழந்தைகள், கர்பிணி பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என்றும் அனைவருக்கும் ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் என்றும் கூறலாம். நாம் கேழ்வரகு மாவில் புட்டு, இடியப்பம், களி, அடை போன்றவற்றை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம்.

சிறு தானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு மாவினில் செய்வதால் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்கும். மேலும் இந்த முறுக்கின் சுவை மொறுமொறுவென்று இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என்று  அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

வாருங்கள்! ருசியான கேழ்வரகு முறுக்கினை வீட்டில் என்று இந்த தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

ராகி மாவு -1/2 கப்
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
வெள்ளை எள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பட்டர் - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

உடல் எடையை குறைக்க எளிய வழிசெய்யும் "கம்பு சாம்பார் சாதம்"!

செய்முறை:

முதலில ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  பட்டரை ஒரு சிறிய பானில் விட்டு அடுப்பில் வைத்து உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த மாவினில் உருகிய பட்டர், எள், மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது சிறிதாக வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சஃப்ட்டாக முறுக்கு மாவு பதத்த்தைப் போன்று பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு விலசாமான கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். பின் முறுக்கு அச்சு உழக்கின் உள்ளே சிறிது எண்ணெய் தடவி பின் பிசைந்த ராகி மாவை கொஞ்சம் வைக்க வேண்டும்.  ஒரு பெரிய காட்டன் துணியை விரித்து போட்டுக்.கொள்ள வேண்டும் அதில் முறுக்கு பிழிந்து வைத்து கொள்ள வேண்டும். அல்லது கரண்டியின் மேல் முறுக்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும் . 

பின் ஒவ்வொறு முறுக்காக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு ஒரு பக்கம் பொரித்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுத்தால் ருசியான கேழ்வரகு முறுக்கு ரெடி!!!

இதே போன்று ராகி மாவினை பயன்படுத்தி சீடை, தட்டை போன்றவற்றையும் செய்யலாம்.

click me!